ஒரே ஓவரில் ஆறு விக்கெட்! எகிறிய ஸ்டம்புகள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயதே ஆன பள்ளி மாணவர் லூக் ராபின்சன், ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயதே ஆன பள்ளி மாணவர் லூக் ராபின்சன், ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்துள்ளார். இதில் அனைத்து விக்கெட்டுமே போல்ட் என்பது முக்கியமான விஷயமாகும்.

அண்டர் 13 பிரிவில், வடகிழக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிலடெல்ஃபியா கிரிக்கெட் கிளப் அணிக்காக விளையாடிய போது, அவர் வீசிய ஒரே ஓவரில் ஆறு பந்துகளிலும் விக்கெட்டுகள் சாய்த்தார். ஆறு பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளும் தெறித்தது தான் மிகவும் ஹைலைட்டான விஷயம்.

இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், லூக் ராபின்சனின் தந்தை தான் இப்போட்டியின் நடுவராக செயல்பட்டார். தனது மகனின் சிறப்பான சாதனையை தன் கையால் அமோதிப்பது போல், ஒவ்வொரு பந்துகளிலும் விக்கெட் வீழ்ந்த போதும், தனது விரல்களை உயர்த்தி அவுட் காண்பித்தார்.

அதேபோல், லூக் ராபின்சனின் இளைய சகோதரரும் அப்போட்டியில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார். லூக்கின் தாத்தா எல்லைக் கோட்டில் அமர்ந்து போட்டியை ரசித்துக் கொண்டிருக்க, லூக்கின் தாயார் இவையனைத்தையும் தனது கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.

×Close
×Close