/tamil-ie/media/media_files/uploads/2017/09/rafal-nadal-ap-m1.jpg)
Rafael Nadal, of Spain, holds up the championship trophy after beating Kevin Anderson, of South Africa, in the men's singles final of the U.S. Open tennis tournament, Sunday, Sept. 10, 2017, in New York. (AP Photo/Julio Cortez)
அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்தது முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஸ்டீபென்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஃபேல் நடால், 32-வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க வீரர் கெவின் ஆண்ட்டர்சனை ஃபைனலில் எதிர் கொண்டார். இந்த போட்டியில் நடாலின் கையே ஓங்கி இருந்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கெவின் ஆண்டர்சன்னை வீழ்த்தி பட்டம் வென்றார்.
நம்பர் 1 ப்ளேயர் என்பதை நிரூபிக்கும் வகையில் 58 நிமிடங்களில் போட்டியை முடித்தார் நடால். இதுவரை நடால் ஒட்டுமொத்தமாக 16 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது அமெரிக்க ஓபனில் பட்டம் வென்ற நடால் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.