பரபரப்பான ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸை வீழ்த்தியது, காரைக்குடி காளை!

கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரில் சிக்ஸர் அடித்த அனிருதா, அணியின் வெற்றியை உறுதி...

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் திருவள்ளூர் அணியை வீழ்த்தி காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணி மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்

இந்த நிலையில், திண்டுக்கல்லில் நேற்று நடந்த 13–வது ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காரைக்குடி காளை அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்றதிருவள்ளூர் கேப்டன் பாபா அபராஜித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக சதுர்வேத்தும், சித்தார்த்தும் களஙத்திற்குள் புகுந்தனர்.

சிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்ளுகளில் 50 ரன்களை சேர்த்தது. அப்போது, சித்தார்த் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். சதுர்வேத் 45 ரன்னில் (31 பந்து, ஒரு சிக்சர், 6 பவுண்டரி) வெளியேறினார். கேப்டன் பாபா அபாரஜித் 39 ரன்கல் எடுத்தார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது.

காரைக்குடி காளை பந்துவீச்சைப் பொறுத்தவரை, சோனுயாதவ் 2 விக்கெட்டுகளையும், சுனில் சாம், கணபதி சந்திரசேகர், ராஜ்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது காரைக்குடி காளை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்தியா, அனிருதா ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி 5.2 ஓவர்களில் 54 ரன்களை எடுத்தது. அப்போது, 29 ரன்கள் எடுத்திருந்த விஷால் வைத்தியா ( 17 பந்து, 2 சிக்சர், 3 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களம்இறங்கிய கேப்டன் பத்ரிநாத் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 4 விக்கெட் எஞ்சியிருக்கும் இருக்கும் நிலையில், 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. காயத்தால் ஓய்வெடுக்கச் சென்ற அனிருதா மீண்டும் களம் திரும்பினார். முதல் பந்தில், கணபதி சந்திரசேகர் (25 ரன், 15 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், அடுத்த பந்தை சிக்ஸருக்கு தெறிக்க விட்ட அனிருதா, அணியின் வெற்றியை உறுதி செய்தார். 19.3–வது ஓவரில் அந்த இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அனிருதாவும் 55 ரன்களுடனும், சுவாமிநாதனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள காரைக்குடி காளை, தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.

×Close
×Close