"Closure! TNPL calling @dindigul Dragons," Ravichandran Ashwin wrote on his Instagram story.
Ravichandran Ashwin - TNPL 2023 Tamil News: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. கோவையில் நடைபெற்ற முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.00 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.
Advertisment
அணியில் இணையும் அஸ்வின்
இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டி.என்.பி.எல். தொடருக்கான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் இணைய உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் விமானத்தின் இருக்கையில் அமர்ந்தவாறு எடுத்த புகைப்படத்துடன் ஸ்டோரி போட்டிருந்தார். அதில் அவர், "நெருங்கிவிட்டேன்! டி.என்.பி.எல். காலிங் @திண்டுக்கல் டிராகன்ஸ்" என்று பதிவிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
மிகவும் விறுவிறுப்பாக தொடங்கியுள்ள நடப்பு டி.என்.பி.எல். தொடரில் நாளை புதன்கிழமை (ஜூன் 14) நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொள்கிறது.
முந்தைய சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்தனர். எனவே, நடப்பு சீசனில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய மூத்த வீரரான அஸ்வின் அவர்களின் அணியில் இருப்பதால் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் அணியை மேலும் வலுப்படுத்துவார் என்று நம்பலாம்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அஸ்வின் 13 போட்டிகளில் விளையாடி 10 இன்னிங்ஸ்களில் 67 ரன்கள் எடுத்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 30 ஆக இருந்தது. 51 ஐபிஎல் பந்துகளில் 11.16 சராசரியுடன் 131.3 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். தனது மாயாஜால சுழலில் அஸ்வின் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil