Advertisment

ஐ.பி.எல் ஃபார்மை அப்படியே எடுத்துட்டு வர்றாரு… கேம் சேஞ்சராக மாறும் 3டி பிளேயர் விஜய் சங்கர்

கோவைக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய விஜய் சங்கர் 26 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

author-image
WebDesk
New Update
TNPL 2023: Vijay Shankar the game changer This Season Tamil News

Vijay Shankar

Vijay Shankar  - TNPL 2023 Tamil News: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. கோவையில் நடைபெற்ற முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 70 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், கோவையில் இன்று நடைபெறும் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.00 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.

Advertisment

ஐ.பி.எல் ஃபார்மில் விஜய் சங்கர்

இந்திய வீரரான விஜய் சங்கர் பொதுவாக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். அதனால், அவரை மூன்று டைமன்ஷன் திறனை கொண்ட வீரர் (3டி பிளேயர்) என குறிப்பிட்டு இருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக தவித்து வந்த அவர், தற்போது அதிலிருந்து முழுதுவமாக மீண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் களமாடி இருந்த சங்கர் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். 14 போட்டிகளில் விளையாடி 143.5 ஸ்டிரைக் ரேட்டில் 301 ரன்களை எடுத்த இருந்தார். குறிப்பாக, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் 24 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மேலும், அரைசதம் அடித்து 51 ரன்கள் எடுத்தார்.

தமிழக அணியின் ஆல்ரவுண்டர் வீரரான சங்கர் ஒரு பேட்ஸ்மேனாகவே ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபித்த நிலையில், பந்துவீச்சிலும் தான் சிறந்தவர் என்பதை தமிழகத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் தொடரின் தொடக்க ஆட்டத்திலே நிரூபித்து விட்டார். நடப்பு டி.என்.பி.எல். தொடரில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் அவர் விளையாடி வரும் நிலையில், அவரை அந்த அணி ஏலத்தில் 10.25 லட்சத்துக்கு வாங்கி இருந்தது.

publive-image

லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் ஆடும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், அந்த ஆட்டத்தில் அவர் பந்துவீச்சில் கலக்கி இருந்தார். 4 ஓவர்களை வீசி இருந்த அவர் 26 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆனால், பேட்டிங்கில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். எதிர்வரும் போட்டிகளில் அவர் அதிலும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Tnpl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment