Advertisment

U-19 உலகக் கோப்பையை நான்கு முறை வென்று இந்தியா புதிய வரலாறு! பெருமை சேர்த்த நான்கு கேப்டன்கள்!

ஒட்டுமொத்தமாக, U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்கிற பெருமையை மன்ஜோத் கல்ரா பெற்றுள்ளார்.

author-image
Anbarasan Gnanamani
Feb 03, 2018 14:01 IST
New Update
U-19 உலகக் கோப்பையை நான்கு முறை வென்று இந்தியா புதிய வரலாறு! பெருமை சேர்த்த நான்கு கேப்டன்கள்!

நியூசிலாந்தின் மவுன்ட் மவுங்கனுயி நகரில் இன்று நடைபெற்ற U-19 உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி கோப்பையை வென்றது.

Advertisment

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, 216 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, எளிய இலக்கை சவாலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விரட்டிய இந்தியா, 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 38.5வது ஓவரில் எட்டியது.

இதன் மூலம் U-19 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நான்காவது முறையாக உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது.

உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த இந்திய U-19 கேப்டன்கள்:

2000 - முகமது கைப்

2008 - விராட் கோலி

2012 - உன்முக்த் சந்த்

2018 - ப்ரித்வி ஷா

மேலும், இன்றைய போட்டியின் மூலம் U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையை மன்ஜோத் கல்ரா பெற்றுள்ளார். அவர் 101* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக, கடந்த 2012ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக இருந்த உன்முக்த் சந்த் 111* ரன்கள் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக, U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்கிற பெருமையை மன்ஜோத் கல்ரா பெற்றுள்ளார்.

#Indvsaus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment