உமேஷ் யாதவின் குடும்பத்தினர் இது தொடர்பாக எந்தவித புகாரும் அளிக்கவில்லை. எனினும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிகெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் வீட்டில் மர்ம நபர்கள் ரூ.4500 ரொக்கப்பணம் மற்றும் இரண்டு போன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நாக்பூரில் உள்ள ஷங்கர் நகரில் உமேஷ் யாதவின் அபார்ட்மென்ட் உள்ளது. திங்கள் கிழமை, வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாதபோது இந்த சம்பம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில், உமேஷ் யாதவ், தாயாரின் போனும், அவரது மனைவியின் பர்ஸில் இருந்த ரூ.45000 ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமை மாலை 7 மணியளவில் வெளியில் சென்றுள்ள உமேஷ்யாதவின் குடும்பத்தினர், அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதற்கிடைப்பட்ட நேரத்தில் இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உமேஷ் யாதவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் இதுவரை எந்தவித புகாரும் அளிக்கவில்லை. ஆனாலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது: அங்கு அபார்ட்மென்ட் கட்டும் பணியில் ஈடுபட்டு வருபவர்களில் யாரேனும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம். உமேஷ் யாதவ் இருக்கும் அபார்ட்மென்ட்டின் பின்பகுதியின் வழியாக அவர்கள் வீட்டிற்குள் புகுந்திருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.