Advertisment

சூப்பர்மேனாக தாவிய பட்லர்… பிரம்மிக்க வைக்கும் அசத்தல் கேட்ச்! (வைரல் வீடியோ)

English cricketer Jos Buttler takes sensational catch, Fans hails him as Superman viral video Tamil News: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் ஆட்டத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் வீரர் பட்லர் 'சூப்பர்மேன்' போல் டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

author-image
Martin Jeyaraj
New Update
VIDEO: Buttler takes fantastic catch in 2nd Ashes Test; Fans hails him as ‘Superman'

Ashes test news in tamil: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடருக்கான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment
publive-image

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் ஜோடி களமிறங்கினர்.

சூப்பர்மேன் பட்லர்

இந்த ஜோடியில் 28 பந்துகளில் 3 ரன்கள் சேர்ந்திருந்த இடதுகை பேட்ஸ்மேன் மார்கஸ் ஹாரிஸ், தனக்கு இடப்பக்கமாக ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை தனது லெக் சைடில் விரட்டினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த விக்கெட்கீப்பர் ஜோஸ் பட்லர், பந்துக்கு ஏற்றவாறு நகர்ந்து வந்து, பந்தை லாவகமாக டைவ் அடித்து பிடித்தார். பந்தும் அவரது கையில் வசமாக சிக்கிக்கொண்டது. எனவே, அவுட் ஆனா மார்கஸ் ஹாரிஸ் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

பட்லரின் அசத்தாலான இந்த கேட்ச் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றுள்ளதோடு, தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும், 'சூப்பர்மேன்' போல் தாவிப் பிடித்துள்ளார் பட்லர் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை புகழந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆஷஸ் தொடர்: 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் - ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை சேர்த்துள்ளது. அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அரைசதம் கடந்துள்ளார். அவர் 8 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், மறுமுனையில் உள்ள மார்னஸ் லாபுசாக்னே 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

England Sports Cricket Australia England Cricket Team Ashes Jos Buttler
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment