பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது; ஆனால், ஒருவர் ஒட்டுமொத்த இந்தியாவையே வீழ்த்திவிட்டார்!

இந்தியா - பாகிஸ்தான் க்ளாஷில் துளி சுவாரஸ்யம் கூட இல்லை. ஆனால், போட்டி நடந்த மைதானத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது.

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணியுடனான போட்டியில், இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மழையால் பல முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால், போட்டி 48 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 48 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் 91 ரன்களும், தவான் 68 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங், 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இறுதியாக கோலி 81 ரன்களுடனும், சிக்ஸர்களாக விளாசிய ஹர்திக் பாண்ட்யா 6 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து நாட் அவுட்டாக இருந்தனர்.

பின் 48 ஓவரில் 320 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், தொடக்கத்தில் சற்று நிதானமாக ஆடியது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் 41 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இதனால், பாகிஸ்தான் 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், பெரிதாக முன்னனுபவம் இல்லாத வீரர்களை கொண்டிருந்த பாகிஸ்தான் அணியால், 33.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. காயம் காரணமாக வாஹாப் ரியாஸ் பேட்டிங் செய்யவில்லை. எனவே, இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்தியா – பாகிஸ்தான் க்ளாஷில் துளி சுவாரஸ்யம் கூட இல்லை.

ஆனால், போட்டி நடந்த மைதானத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது. இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்ஏய்ப்பு செய்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்திருப்பவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் நேற்று மைதானத்தில் அமர்ந்து இந்தப் போட்டியை ரசித்துப் பார்த்துள்ளார். பொதுமக்கள் வங்கியில் கடன்வாங்கி அதனை திருப்பி கட்டாமல், இப்படி ஹாயாக உட்கார்ந்து கிரிக்கெட் ரசிக்க முடியுமா?

×Close
×Close