யெஸ்... நாம் வென்றுவிட்டோம்....
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆன பிறகு, முதல் ஒருநாள் போட்டியில் நாம் வென்றுவிட்டோம்.
மீண்டும், ஆஸ்திரேலியாவுக்கு நமது ஆதிக்கத்தை வெளிக்காட்டி இருக்கிறோம்.
ஆனாலும், ஆஸ்திரேலியா கொஞ்சமும் சளைக்கவில்லை. நேற்று சில விக்கெட்டுகளை அவர்களாகவே தாரை வர்த்தனர். ஐ மீன்... தெளிவான ஐடியா இன்றி தூக்கி கையில் கொடுத்து சென்றனர்.
அந்த வகையில், கேப்டன் ஃபின்ச்-ன் தொடக்க விக்கெட்டுக்குப் பிறகு, சவுத்பா உஸ்மான் கவாஜா, மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் பார்ட்னர்ஷிப்பை சிறப்பாக பில்ட் செய்தனர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த இந்த பார்ட்னர்ஷிப், அடுத்தடுத்து, மோசமான ஷார்ட்களை தேர்வு செய்து அவுட் ஆகி, நல்ல வாய்ப்பை ஸ்ட்ரெட்ச் செய்ய தவறிவிட்டனர்.
ஸ்டாய்னிஸ் 37 ரன்கள் எடுத்திருந்த போது, கேதர் ஜாதவ் வீசிய வெர்ட்டிகள் (மலிங்காவை விட மோசமான வெர்ட்டிகள்) பந்தில், கேஷுவல் புல் ஷாட் ஆடினார். விளைவு... 'வாடா கண்ணா வாவா' என்பது போல் ஷார்ட் மிட் விக்கெட்டில் காத்திருந்த, கேப்டன் விராட் கோலியின் கைகளில் பந்து சென்று அமர்ந்து கொண்டது.
அடுத்த பலி, உஸ்மான் கவாஜா... 50 ரன்கள் அடித்து, அணிக்கு அளிக்க வேண்டிய பங்கு இன்னும் பிரம்மாண்டமாய் மீதமிருக்க, குல்தீப் யாதவ் ஓவரை எதிர் கொண்டார்.
சைனாமேனின் வழக்கமான பந்தை, மிட் விக்கெட்டில் அடிக்க நினைத்து, அப்படியே ஒரு அப்பிஷ் ஃபிளிக் செய்ய, பாய்ந்து வந்த நம்ம விஜய் ஷங்கர், டீப் மிட் விக்கெட்டில் லேண்ட் ஆகவிருந்த பந்தை, தனது கைகளில் ஏந்தி, கவாஜாவுக்கு டேக்-ஆன் கொடுத்தார்.
யெஸ்.... நேற்றைய போட்டியில், ஆஸ்திரேலியா மொத்தமாக 236 ரன்கள் மட்டுமே அடிக்க, விஜய் ஷங்கரின் இந்த கேட்சும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.