இன்று செம வைரலான செல்ஃபி இது....!

ஹினாயாவின் க்யூட்னஸ் என்னை வியக்க வைக்கிறது!

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்தாரோ என்னவோ, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்பிருந்ததைவிட தற்போது அதிக எனர்ஜியுடன் காணப்படுகிறார். ஏனெனில், நடப்பு 10-வது ஐபிஎல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய முதல் அணி எனும் பெயரைப் பெற்றது ஆர்சிபி.

இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் தோற்று, புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளதால், எந்தவித நெருக்கடியும் இன்றி இனி விளையாடலாம் என்பது தான் கோலியின் இந்த உற்சாகத்திற்கு காரணம் என கூறலாம்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்பஜன் சிங்கின் குழந்தை ஹினாயாவுடன், விராட் எடுத்துள்ள செல்ஃபி தான் தற்போது இணையத்தில் வைரல். ஹினாயாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை தனது இன்ஸ்டா கிராமில் பகிர்ந்துள்ள கோலி, ‘ஹினாயா என் தாடியில் எதையோ தேடுகிறாள். ஹினாயாவின் க்யூட்னஸ் என்னை வியக்க வைக்கிறது. ஹர்பஜனும் அவரின் மனைவியும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

×Close
×Close