/tamil-ie/media/media_files/uploads/2017/12/z987.jpg)
இந்திய கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஜோடி கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் திருமணம் செய்து கொண்டனர். மிக மிக ரகசியமாக நடைபெற்ற இத்திருமணம் குறித்து சில மணி நேரங்கள் கழித்தே இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தொடர்ந்து இத்தாலியிலேயே தங்களது தேனிலவையும் 'விருஷ்கா' ஜோடி கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு ஜோடியாக தங்களது முதல் படத்தை பதிவேற்றியுள்ளார் அனுஷ்கா ஷர்மா. அதில், "நான் சொர்க்கத்தில் இருக்கிறேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
தேனிலவு முடிந்தவுடன் நாடு திரும்பும் விராட் - அனுஷ்கா, புது டெல்லியில் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் ரிசப்ஷனிலும், டிசம்பர் 26-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் இரண்டாவது ரிசப்ஷனிலும் கலந்து கொள்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.