கடந்த டிசம்பர் 21ம் தேதி கோலி - அனுஷ்கா தம்பதி, டெல்லியில் தங்களது முதல் ரிசப்ஷனை முடித்திருந்த நிலையில், நேற்று(டிச., 26) மும்பையில் இரண்டாவது ரிசப்ஷன் கோலாகலமாக அரங்கேறியது.
சினிமா ஸ்டார்கள், கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் கிங் ஷாருக்கானும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதுகுறித்த வீடியோ ஒன்று சமூக தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, மனைவி அனுஷ்காவை பார்த்து, கோலி காதல் வசனம் பேசுகிறார். ஆனால், கோலியின் வாய் மட்டும் தான் அசைகிறது... குரல் ஷாருக் கானுடையது.
ஷாருக் படத்தின் பிரபல வசனமான இதற்கு லிப் மூவ்மென்ட் மட்டும் கோலி கொடுக்க, ஷாருக் அதற்கு உயிர் கொடுக்க, வீடியோ செம வைரல்!.