Virat Kohli buys 2,000 sq ft villa in Alibaug for ₹6 crore Tamil News
Virat Kohli's Alibaug villa purchase Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீபத்தில் அலிபாக், அவாஸ் கிராமத்தில் ஒரு சொகுசு 'வில்லா'-வை வாங்கியுள்ளார். சுமார் 2,000 சதுர அடி உள்ள அந்த வில்லாவின் மதிப்பு ரூ. 6 கோடி ஆகும். அதற்கான முத்திரைத் தொகையாக மட்டும் கோலி ரூ.36 லட்சத்தை செலுத்தியுள்ளார். மேலும், இயற்கை எழில் கொஞ்சும் அந்த வில்லாவில் 400 சதுர அடி நீச்சல் குளமும் உள்ளது.
Advertisment
கோலி வாங்கியுள்ள இந்த வில்லா-வின் உட்புறத்தை பாலிவுட் நடிகர் சஞ்சய் கானின் மகள் சுசானே கான் வடிவமைத்துள்ளார். “அவாஸ் அதன் இயற்கை அழகு காரணமாக ஒரு விருப்பமான இடம். தவிர, மாண்ட்வா ஜெட்டி ஆவாஸிலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் உள்ளது மற்றும் வேகப் படகுகள் மும்பைக்கான தூரத்தை 15 நிமிடங்களாகக் குறைத்துள்ளன." என்று அவாஸ் லிவிங் அலிபாக் எல்எல்பியின் சட்ட ஆலோசகராக பணிபுரியும் வழக்கறிஞர் மகேஷ் மத்ரே கூறியுள்ளார்.
அலிபாக் பகுதியில் உள்ள இடத்தின் சராசரி விலை ஒரு சதுர அடிக்கு ரூ.3000 முதல் ரூ.3,500 வரை இருக்கும் என்றும், இங்குள்ள வில்லா-களில் பெரும் பணக்காரர்கள் தங்களின் வார இறுதி நாட்களை கழிக்க வருவார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Advertisment
Advertisements
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி மும்பை அலிபாக்கில் ஆடம்பரமான ஒரு பங்களாவை வாங்கினார்கள். அதன் மதிப்பு ரூ.19.24 கோடி ஆகும். அதற்காக கோலி 1.15 கோடி முத்திரைக் கட்டணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
கோலி மட்டுமல்ல, அவரது இந்திய அணி வீரரும் தற்போதைய கேப்டனுமான ரோகித் சர்மாவும் 2021 ஆம் ஆண்டில் மத்ரோலி கிராமத்தில் நான்கு ஏக்கர் நிலத்தை வாங்கிய அலிபாக் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
இதற்கிடையில், நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதுவரை நடந்த மூன்று இன்னிங்ஸ்களில் 76 ரன்களை மட்டுமே எடுத்துள்ள கோலி இந்த தொடரில் இன்னும் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. மறுபுறம், ரோகித் தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஒரு மேட்ச்-வின்னிங் சதம் அடித்தார் மற்றும் இரண்டு போட்டிகளில் 183 ரன்கள் எடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil