ஐசிசி-யின் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஒருநாள் போட்டிக்கான தரவரிசை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பேட்டிங்க தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 873 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரைவிட 12 புள்ளிகள் முன்னிலையில் இருக்கும் விராட் கோலி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் களம் இறங்கவுள்ளார். இதில் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தும்பட்சத்தில், அதிக புள்ளிகள் வித்தியாசத்தில், விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கும் வாய்ப்பைப் பெறுவார்.
பேட்டிங் தரவரிசை
- விராட் கோலி (873)
- ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்(861)
- தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ்(847)
- இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (799)
- பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம்(786)
ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். இதேபோல, இந்திய வீரர்களான மகேந்திர சிங் டோனி(728) 12-வது இடத்திலும், ஷிகர் தவான்(725) 13-வது இடத்திலும், ரோகித் சர்மா(724) 14-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சில், முதல் பத்து இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.
- ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட்(732)
- தென் ஆப்ரிக்க வீரர் இம்ரான் தாகீர்(718)
- ஆஸ்திரேலிய வீரர் மிட்ச்செல் ஸ்டார்க்(701)
- தென் ஆப்ரிக்க வீரர் கசிகோ ரபடா (685)
- நியூசிலாந்து வீரர் டிரென்ட் பௌல்ட் (665)
ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். இந்திய வீரர்களான புவனேஷ் குமார் (608) 13-வது இடத்திலும், அக்ஷர் பட்டேல்(585) 20-வது இடத்திலும் உள்ளனர்.
இதேபோல, ஓருநாள் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் பட்டியலிலும், முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை.
- வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன்(353)
- பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் (338)
- ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி (328)
- ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஃபால்க்னர் (298)
- இலங்கை வீரர் ஆங்கிலோ மேத்திவ்ஸ் (293)
ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா(240) முதல் 20-இடங்களில், 13-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், 20-ம் தேதி இலங்கை அணிக்கு எதிரான 5-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றால் மட்டுமே 3-வது இடத்தில் நீடிக்க முடியும்.
- தென் ஆப்ரிக்கா (119)
- ஆஸ்திரேலியா (117)
- இந்தியா (113)
- இங்கிலாந்து (113)
- நியூசிலாந்து (111)
இலங்கைக்கு எதிரான தொடரில் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றால் கூட இந்திய அணி 113 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.