Advertisment

ICC Awards 2018: ஐசிசி விருதுகளை ஆக்கிரமித்த 'தனிக்காட்டு ராஜா' விராட் கோலி!

சிறந்த ஒருநாள் அணியில் விராட் கோலி தவிர்த்து ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ICC Awards 2018: ஐசிசி விருதுகளை ஆக்கிரமித்த 'தனிக்காட்டு ராஜா' விராட் கோலி!

ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து ஐசிசி விருது வழங்கி வருகிறது. அதன்படி, 2018ம் ஆண்டுக்கான விருதுகளை ஐசிசி இன்று(ஜன.22) அறிவித்துள்ளது.

Advertisment

அதில், சிறந்த ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் வீரர் (ICC Men’s ODI Cricketer of the Year)

சிறந்த ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர், (ICC Men’s Test Cricketer of the Year)

சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர் (Sir Garfield Sobers Trophy for ICC Men’s Cricketer of the Year)

என ஐசிசியின் டாப் மூன்று விருதுகளையும் இந்திய கேப்டன் விராட் கோலி வென்று அசத்தியுள்ளார்.

அதேபோல், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடர்களில் சதம் விளாசி அசத்திய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், சிறந்த வளரும் கிரிக்கெட் வீரர் (Best Emerging Cricketer) விருதை வென்றுள்ளார்.

ஐசிசி சிறந்த முன்மாதிரி வீரருக்கு வழங்கப்படும் ICC Spirit Of Cricket விருது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தவிர, சிறந்த ஐசிசி டெஸ்ட் அணிக்கான கேப்டனாகவும், சிறந்த ஒருநாள் அணிக்கான கேப்டனாகவும் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த டெஸ்ட் அணியில் விராட் கோலி தவிர்த்து ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

சிறந்த ஒருநாள் அணியில் விராட் கோலி தவிர்த்து ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

சிறந்த அம்பயருக்கான விருது இலங்கையின் குமார் தர்மசேனா வென்றுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேவில் நடந்த டி20 போட்டியில் 76 பந்துகளில் 172 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச்சின் ஆட்டம், சிறந்த டி20 ஆட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ICCன் Associate அணிகளில் சிறந்த வீரராக ஸ்காட்லாந்தின் கேலம் மெக்லியோட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Virat Kohli Rishabh Pant Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment