Advertisment

கோலியை விட அதிகமாக சம்பளம் வாங்கும் அந்த இரு கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?

நவநாகரீக கிரிக்கெட் உலகில், அதிகம் சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர் என்றால், கோலி தான் என்று நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட சொல்வான். ஆனால்.....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோலியை விட அதிகமாக சம்பளம் வாங்கும் அந்த இரு கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?

'என்னடா இப்படி சொல்றாய்ங்க!'-ங்குற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு க்ளீயரா கேட்குது. ஆனா, என்ன பண்றது! இதுதான் உண்மை. டி20யிலிருந்து விரைவில் டி10-க்கு உருமாற உள்ள இந்த நவநாகரீக கிரிக்கெட் உலகில், அதிகம் சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர் என்றால், விராட் கோலி தான் என்று நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட சொல்வான். ஆனால், உண்மையில் இந்த லிஸ்டில் டாப்பில் கோலி இல்லையாம். பிசிசிஐ-யின் ஒப்பந்தத்தின்படியும், போட்டி ஊதியத்திலும் இந்திய கேப்டன் விராட் கோலியை விட ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறாராம்

Advertisment

இதுகுறித்து, இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அதிக சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளது. இரண்டாவது இடத்திலும், கோலி இல்லை என்பது அடுத்த ஆச்சர்யம்.

ஆம்! இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் உள்ளார். ஆக, முதல் இடத்தில் ஸ்மித்தும், இரண்டாம் இடத்தில் ஜோ ரூட்டும், மூன்றாவது இடத்தில் விராட் கோலியும் இருக்கின்றனர்.

ஒப்பந்தம் மற்றும் போட்டிக்கான ஊதியத்தின் அடிப்படையில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்களின் பட்டியல் இதோ,

Team                                             Player                         Role                                  INR (per year)

Australia                                  Steven Smith                 Captain                                  9.6 crores

England                                     Joe Root                   Test captain                               9 crores

India                                          Virat Kohli                    Captain                                 6.5 crores

South Africa                           Faf du Plessis                 Captain                                  3.8 crores

Sri Lanka                                Angelo Mathews        Former captain                        2.1 crores

Pakistan                                 Sarfraz Ahmed               Captain                                  1.95 crores

West Indies                           Jason Holder               Test, ODI captain                   1.76 crores

New Zealand                      Kane Williamson             Captain                                   1.63 crores

Bangladesh                          Shakib Al Hasan           Former captain                        91 lakhs

Zimbabwe                         Graeme Creamer            Captain                                     58.5 lakhs

ஆனால், அதேசமயம் விளம்பரம் மற்றும் இதர ஒப்பந்தங்கள் மூலம், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரராக இருப்பவர் கோலி தான். ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, கால்பந்து ஜாம்பவன்களான லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரது சம்பாத்தியத்தின் ஐந்தில் ஒரு பங்கினை கோலி சம்பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய அணியின் தலைமை கோச் ரவி சாஸ்திரி தான் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 1.17 மில்லியன் டாலர்கள். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லேமன் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 0.55 மில்லியன் டாலர்கள்.

Joe Root Virat Kohli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment