Advertisment

விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது மிகப்பெரிய தவறு: பாகிஸ்தானின் 'கன்சிஸ்டன்சி கில்லி'!

வலது கை பேட்ஸ்மேனான பாபர் அசம், இதுவரை 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,758 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 அரை சதங்களும், 7 சதங்களும் அடங்கும்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது மிகப்பெரிய தவறு: பாகிஸ்தானின் 'கன்சிஸ்டன்சி கில்லி'!

ஒருநாள் மற்றும் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மட்டும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் இருக்கிறார். இன்றைய நவ நாகரீக கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக கொண்டாடப்படுகிறார் கோலி.

Advertisment

அதேபோல், பாகிஸ்தான் அணியின் பாபர் அசம் மிகவும் கவனிக்கப்படும் வீரராக உருவெடுத்து வருகிறார். 'கன்சிஸ்டன்சியில் கில்லி'யாக விளங்கும் இவரை, கோலியுடன் ஒப்பிட்டு பேசினார் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கே ஆர்தர். "பாபரும், கோலியும் மூன்றாவது வீரர்களாக களமிறங்கி அணியை வெற்றிப் பெற வைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர்" என்றார்.

ஆனால், இதனை மறுத்துள்ள பாபர், விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவதே தவறு என்று கூறுகிறார்.

இதுகுறித்து பாபர் அசம் அளித்துள்ள பேட்டியில். "பயிற்சியாளர் மிக்கே என்னை மிகப் பெரிய வீரருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். ஆனால், நிச்சயம் அப்படி கம்பேர் செய்வது தவறு. இருப்பினும், அது பயிற்சியாளரின் தனிப்பட்ட கணிப்பாக இருக்கலாம். எங்கள் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், அவர் தான் உலகின் நம்பர்.1 வீரர். பாகிஸ்தானுக்காக விளையாடும் போது எப்போதும் எனது அதிகபட்ச சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர விரும்புகிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய பாபர், "முன்னதாக, நான் ஏ பி டி வில்லியர்சின் ஆட்டத்தை மிகவும் விரும்பி பார்த்தேன். கிரிக்கெட்டில் அவரை பின்பற்றவே நினைக்கிறேன். அவரை நான் காப்பி அடிக்கிறேன் என்று கூட சொல்லலாம். அவர் விளையாடிய பல ஷாட்களை நான் பின்பற்றி வருகிறேன். ஆனால், இப்போது விராட் கோலியின் ஆட்டத்தையும், ஹஷிம் ஆம்லாவின் ஆட்டத்தையும் சேர்த்து பின்பற்றுகிறேன்" என்று தெரிவித்தார்.

வலது கை பேட்ஸ்மேனான பாபர் அசம், இதுவரை 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,758 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 அரை சதங்களும், 7 சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் ஆடி 475 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகமான ஆவரேஜ் வைத்திருக்கும் இரண்டாவது பேட்ஸ்மேன் பாபர் அசம் தான்.

Virat Kohli Babar Azam India Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment