பெண்கள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கும், கேப்டன் மிதாலி ராஜுக்கு ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்து அனுப்பியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
எட்டு அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறு வருகிறது. அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வென்று இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்து இருந்தது. அதற்கடுத்து, இரண்டாவது முறையாக தற்போது இறுதிப் போட்டிக்குள் இந்திய மகளிர் அணி நுழைந்துள்ளதால் பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான மகளிர் அணியினர், மூன்று முறை ஏற்கனவே உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை எதிர் கொள்கின்றனர். மிதாலி ராஜ் களமிறங்கும் இரண்டாவது உலகக் கோப்பை போட்டி இது என்பது கவனிக்கத்தக்கது. இந்த போட்டி இந்திய நேரப்படி, மாலை மூன்று மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்நிலையில், பெண்கள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கும், கேப்டன் மிதாலி ராஜுக்கு ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 60 நிமிடங்களில் சுமார் 60,000 பேர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். அதில்,"போட்டியில் சிறப்பாக விளையாட உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உலகக் கோப்பை தொடர் முழுக்க அணியை நீங்கள் (மிதாலி ராஜ்) வழிநடத்தி சென்ற விதம் நன்றாக இருந்தது. உங்கள் விளையாட்டை எப்போதும் ரசித்து பார்ப்பேன். பல ஆண்டுகளாக தேசத்திற்கு நீங்கள் பெருமை தேடித் தந்துள்ளீர்கள். அனைத்து வீராங்கனைகளும் தொடர் முழுக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறீர்கள்" என கூறப்பட்டுள்ளது.
A post shared by Virat Kohli (@virat.kohli) on
அண்மையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான அணி வென்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.