ஐசிசி விருதுகளை அள்ளிய விராட் கோலி!

ஐசிசியின் ஒருநாள் கனவு அணியில் விராட் கோலியை தவிர்த்து, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 2017ம் ஆண்டின் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி, 2017ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிகெட் வீரருக்கான விருதும், ஐசிசியின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசியின் ஒருநாள் கனவு அணியில் விராட் கோலியை தவிர்த்து, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசி சிறந்த டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் அஷ்வின் இடம் பெற்றுள்ளனர்.

×Close
×Close