தோனியைப் போன்று இந்திய அணியில் மிகவும் ஃபிட்டாக இருப்பவர் கேப்டன் விராட் கோலி. ஏன், உலகளவில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் மிகவும் ஃபிட்டாக தனது உடல்நிலையை வைத்திருக்கும் வெகு சில வீரர்களில் கோலியும் ஒருவர்.
இந்திய அணியின் அதிரடி மன்னனாக விளங்கிய யுவராஜ் சிங், இன்று அணியில் இடம் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் அவரது மோசமான ஃபிட்னஸ் தான். அவர் மட்டுமல்ல, இந்திய அணியில் ஸ்டாராக விளங்கிய சுரேஷ் ரெய்னாவும், தனது ஃபிட்னஸ் மீது அக்கறை செலுத்தாத காரணத்தால் தான் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
தோனியால் 36 வயதில் இன்றும் மின்னல் வேகத்தில் ரன்கள் ஓட முடிகிறது என்றால், அந்த அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்று அர்த்தம். அதை கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, அவர்களை ரசிக்கும் நாமும் பின்பற்ற முயலலாம்.
'இந்த கிரிக்கெட்ட பார்க்குறதால பரம் பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல', என நீங்கள் கிரிக்கெட் பார்க்கும் போது உங்கள் வீட்டில் திட்டினால், கோலியின் உணவுப் பழக்கத்தை நீங்களும் பின்பற்றி, உடலை ஃபிட்டாக மாற்றி வீட்டில் கெத்து காட்டுங்கள்.
சரி! கோலி அப்படி என்ன தான் சொன்னார்.....
தான் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகள் குறித்து கோலி தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/z712-300x217.jpg)
கோலியின் காலை உணவு (பிரேக்ஃபாஸ்ட்) - மூன்று முட்டைகளின் வெள்ளைக் கருவால் உருவாக்கப்பட்ட ஆம்லெட் மற்றும் ஒரு முழு முட்டை. அதுதவிர, சில கீரைகள், பிளாக் பெப்பர் மற்றும் சீஸ். மேலும், கிரில்டு பாகோன்(அ) ஸ்மோக்டு சால்மன், பப்பாயா, டிராகன் ஃப்ரூட் (அ) வாட்டர் மெலன் மிக்ஸ் செய்த கலவை. இறுதியாக லெமன் கலந்த கிரீன் டீ.
'ராஜ சாப்பாடு' என்று அதைச் சொல்கிறார்.
மதிய உணவு (லன்ச்) - க்ரில்டு சிக்கன், மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, கீரை மற்றும் சில காய்கறிகள்.
இரவு உணவு (டின்னர்) - கடல் உணவுகள் மட்டுமே.. அதுவும் மிக மிக குறைவாக... இரவு எப்போதும் லைட்டாக இருக்க வேண்டும் என்பது கோலியின் ஸ்ட்ரிக்டான அட்வைஸ் ஆகும்.
(நாலு இட்லிய சாப்டா பிரேக்ஃபாஸ்ட் முடிஞ்சிடப்போகுது-னு நினைக்குற உங்க மைண்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேட்குது!)
https://www.youtube.com/embed/1J0o3v8ptHY