Virat kohli Tamil News: இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை முதல் தொடங்கியது. இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டுதலின் போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி மைதானத்திற்குள் நுழையாமல், அவருக்கு பதில் கேஎல் ராகுல் வந்தார். அப்போது பேசிய ராகுல், “துரதிர்ஷ்டவசமாக, விராட் கோலி முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த டெஸ்டில் அவர் குணமடைவார் என்று நம்புகிறேன்." என்று கூறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி இப்படி காயத்தால் அவதிப்படுகிறார் என்று ராகுல் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மிகவும் அரிதான நிகழ்வு என்றாலும், கடந்த காலங்களில் காயம் காரணமாக கோலி சில ஆட்டங்களில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. அவற்றில் சில அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய போட்டிகளாகவும் இருந்துள்ளன.
அப்படி கேப்டன் கோலி, காயம் காரணமாக தவறவிட்ட டெஸ்ட் ஆட்டங்களை இங்கு விவரித்துள்ளோம். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இங்கு பார்க்கலாம்.
1) 2017- தோள்பட்டை காயம்
2017ம் ஆண்டு இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் தொடர் கொண்ட போட்டியில் விளையாடியது. இதில் புனேயில் நாடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொடர்ந்து சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதனால், தொடரில் பரபரப்பு தொற்றிகொள்ளவே, மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அரங்கேறியது. இந்த ஆட்டத்தின் போது பீல்டிங்கில் இருந்த கோலி பவுண்டரி விரட்டப்பட்ட பந்தை தடுக்க முயன்று டைவ் செய்தார். அந்த டைவ் சரியான முறையில் அடிக்கப்படாததால் கோலியின் வலது தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த காயத்துடன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களம் கண்ட கோலி 23 பந்துகளில் 6 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார். எனவே அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, அணியை அஜிங்க்யா ரஹானே வழிநடத்தினார்.
ராஞ்சியில் நடந்த ஆட்டம் ட்ராவில் முடிந்த நிலையில், தர்மசாலாவில் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் காயம் முழுமையாக குணமாகாததால் கோலி களமிறங்கவில்லை. இங்கு நடந்த தொடரின் கடைசி மற்றும் 4வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 2 -1 என்று கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
தொடர்ந்து 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு கோலி இந்திய அணியில் இடம் பெறாதது அதுவே முதல் முறையாகும். அவர் பின்னர் நடந்த 2017ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் முதல் மூன்று ஆட்டங்களிலும் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஆர்சிபி) கலந்து கொள்ளவில்லை.
2) 2018- கடினமான முதுகு வலி
கடந்த 2018ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதலிரண்டு டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி கடைசி மற்றும் 3வது டெஸ்டில் வெற்றி பெற்றது. ஆனால், தொடரை கைப்பற்ற முடியவில்லை.
எனினும், தொடர்ந்து நடந்த 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, தொடரை கைப்பற்றியது.
பின்னர் தொடர்ந்து நடந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடந்த இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் தொடர் சமநிலையில் இருந்தது.
இந்த தொடரின் போது கேப்டன் கோலிக்கு ஏற்பட்ட கடினமான முதுகு வலி காரணமாக அவர் மூன்றாவது ஆட்டத்தில் களமாடவில்லை. அவருக்கு பதில் கேப்டன் பொறுப்பை மூத்த வீரர் ரோகித் சர்மா ஏற்றுக்கொண்டார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20-யில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம், இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்தியா கைப்பற்றி அசத்தியது.
3) 2018- கழுத்து காயம்
2018ம் ஆண்டுக்கான (ஐபிஎல்) இந்தியன் பிரீமியர் லீக்கில் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஆர்சிபி) களமிறங்கிய கேப்டன் கோலி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் அவருக்கு கழுத்து சுளுக்கு ஏற்பட்டது.
இதனால், 2018ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக நடக்க இருந்த சர்ரே கிரிக்கெட் கிளப்புடனான கவுண்டி போட்டியை கோலி இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அவருக்கு பெரும் செலவை ஏற்படுத்தும் என்பதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் கோலி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.