‘டாப்-3 வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர்’ – இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் கோலி!

Shami among ‘best three seamers in world at the moment’ says india’s test captain Virat kohli Tamil News: உலகின் தலை சிறந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர் என ஷமியை புகழந்து தள்ளியுள்ளார் கேப்டன் விராட் கோலி.

Virat kohli Tamil News: Shami among 'best three seamers in world at the moment'

Ind vs SA Boxing Day TEST Tamil News: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் கடந்த 26ம் தேதி முதல் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வந்த முதலாவது டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது.

முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 327 ரன்களை குவித்த நிலையில், தொடர்ந்து வந்த தென்னாப்பிரிக்கா அணி 197 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 130 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 174 ரன்களை சேர்க்கவே தென் ஆப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், 305 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்கள் மட்டும் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால், 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது.

8 விக்கெட்களை காலி செய்த ஷமி

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்காவை 197 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷமியின் பந்துவீச்சு முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக, அவர் 5 விக்கெட்களை கைப்பற்றியது ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதேபோல், தொடர்ந்து நடந்த இரண்டாவது இன்னிங்சிலும் ஷமி தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்தார். 63 ரன்களை விட்டுக்கொடுத்த அவர், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கேப்டன் கோலி புகழாரம்

இந்நிலையில், போட்டிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் விராட் கோலி, உலகின் தலை சிறந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர் என்று கூறி ஷமியை புகழந்து தள்ளியுள்ளார்.

“முகமது ஷமி 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் முற்றிலும் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். என்னைப் பொறுத்தவரை, அவர் தற்போது உலகின் சிறந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார். அவருடைய லைன் மற்றும் லென்த் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்கும் ஒன்றாகவும் உள்ளது. அவரது விக்கெட் வீழ்த்தும் திறன் ஒரு கேப்டனாக எனக்கு அதிக மகிழ்ச்சியை கொண்டு வருகிறது” என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Virat kohli tamil news shami among best three seamers in world at the moment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express