scorecardresearch

சாஸ்திரிகள் பேச்சைக் குறைத்து, செயலில் காட்டினால் நல்லது! – வீரேந்தர் சேவாக் காட்டம்

ஒருவர் என்ன வேண்டுமானாலும், தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் பேசலாம்

Virender sehwag about Ravi shastri
Virender sehwag about Ravi shastri

வீரேந்தர் சேவாக் : இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேச்சை குறைத்து, செயலில் வீரியத்தை காட்ட வேண்டும் என வீரேந்தர் சேவாக் விமர்சித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. சவுதாம்ப்டனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 245 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.

கடந்த 2011, 2014ம் ஆண்டுகளில் தோனி தலைமையில் இங்கிலாந்து வந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்திருந்த நிலையில், இந்த முறை கோலி தலைமையிலும் தோல்வியையே சந்தித்துள்ளது இந்திய அணி.

இந்திய அணி, இங்கிலாந்து தொடருக்கு புறப்படும் முன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ‘உலகிலேயே எந்த நாட்டுக்குச் சென்றாலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடக் கூடிய அணியாக இந்திய அணி திகழ்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

இதைக் குறிப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து கூறுகையில், “உலக அளவில் வெளிநாடுகளில் சென்று சிறப்பாக விளையாடக்கூடிய அணி இந்திய அணி என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேச்சில் மட்டும்தான் கூறுகிறார். ஆனால், பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமேயில்லை. வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்படும் அணிகளின் திறமை களத்தில்தான் வெளிப்படுகின்றன. ஓய்வறையில் அமர்ந்து கொண்டு பேசுவதால் உருவாக்கப்படுவதில்லை, வீண் பெருமையடிப்பதாலும் வருவதில்லை.

ஒருவர் என்ன வேண்டுமானாலும், தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் பேசலாம். ஆனால், வீரர்களின் பந்துவீச்சும், பேட்டிங்கும் பேச வேண்டும் இல்லாவிட்டால், ஒருபோதும் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் அணி என்று பெயர் எடுக்க முடியாது. ஆதலால், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேச்சைக் குறைத்து, செயலில் காட்ட வேண்டும்.

இந்தத் தொடரில் இந்திய அணி முத்திரை பதிக்க ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. முதல் டெஸ்டில் வெற்றி பெறும் தருவாயில் 31 ரன்களில் தோல்வி அடைந்தோம், 4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்களில் வெற்றியை இழந்திருக்கிறோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி லண்டனில் தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Virender sehwag hits out at ravi shastri post indias test series loss vs england

Best of Express