Britain Cricket - India v Pakistan - 2017 ICC Champions Trophy Group B - Edgbaston - June 4, 2017 Pakistan’s Wahab Riaz lies injured Action Images via Reuters / Andrew Boyers Livepic
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் வஹாப் ரியாஸ், எதிரணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசக்கூடியவர். அதற்கு உதாரணமாக 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக்கோப்பை போட்டியின்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, வஹாப் ரியாஸின் பந்துவீச்சை நினைவு கூறலாம்.
Advertisment
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எரிராக பந்துவீசும் போது, தடுமாற்றம் கண்ட வாஹாப் ரியாஸ் , ஒரு பந்தை வீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான் இடையாயான டெஸ்ட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்போட்டியில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த அக்டோபர் 6-ம் தேதி இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. இந்த டெஸ்ட்போட்டியின் போது ஒரு ஹைலைட்டான சம்பவம் நடந்தது. அதவாது, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்து விளையாடி வந்தது. அப்போது பந்துவீச வந்த பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் பந்துவீசுவதற்கு தடுமாற்றம் கண்டாண்டார். ஒரு பந்தை வீசுவதற்கு பலமுறை ஓடிவந்த, அந்த பந்தை வீச சுமார் 5 நிமிடங்கள் வரை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Wahab Riaz misses his run-up " FIVE TIMES " in a row
அவரின் இந்த செயல்பாடு, பாகிதான் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரை கடுப்பேற்றியும் இருக்கிறது என்பது அவர்களின் ரியாக்ஷனில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
டெஸ்ட் போட்டிகளில் அதிக நோ-போல் வீசியவர்களின் பட்டியில் வாஹாப் ரியாஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பதை ட்விட்டரில் சுட்டிக் காட்டவும் செய்தனர் ரசிகர்கள்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள சாமா டிவியானது, வஹாப் ரியாஸ் குறித்து தலைப்புச் செய்தியையும் வெளியிட்டது. அதில், “பந்து வீசுவது எப்படி என்பதை வாஹாப் ரியாஸ் மறந்துவிட்டார்”(‘Wahab Riaz forgets how to bowl’) என குறிப்பிட்டிருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 482 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 262 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல்அவுட் ஆனது.
தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொங்கிய இலங்கை அணி 96 ரன்களில் சுருண்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-ம் நேர ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.