மகேந்திர சிங் டோனி கொல்கத்தா போலீஸாரின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு சென்று, தனது துப்பாக்கி சுடும் திறனை சோதனை செய்தார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்போட்டித் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகின்றன. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 26-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிடன் கணக்கை தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது போட்டி வியாழக்கிழமை கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் கொல்கத்தா சென்றுள்ளனர். வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது மழை காரணமாக தடைபட்டது. இதனால், மகேந்திர சிங் டோனி கொல்கத்தா போலீஸாரின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு சென்று, தனது துப்பாக்கி சுடும் திறனை சோதனை செய்தார்.
இது தொடர்பான வீடியோவை கொல்கத்தா போலீஸார் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் பிஸ்டல் ஏந்தி கொண்டு நிற்கும் டோனி, தனது திறனை சோதனை செய்கிறார்.
பிசிசிஐ எம்.எஸ் டோனியின் பெயரை பத்மபூஷன் விருதுக்கு புதன்கிழமை பரிந்துரை செய்தது. மகேந்திர சிங் டோனி இதுவர 302 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9737 ரன்களும், 90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டோனி, 1212 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக டோனி 16 சதங்களை அடித்துள்ளார். அதில் 6 சதங்கள் டெஸ்ட் போட்டிகளிலும், 10 சதங்கள் ஒருநாள் போட்டிகளிலும் எடுத்துள்ளார். அதோடு, 100 அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். விக்கெட் கீப்பர் என்கிற முறையில் 584 கேட்ச் பிடித்துள்ள டோனி, 163 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
பிஸ்டல் பயிற்சியுடன் களம் இறங்குவதைப் பார்த்தால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை தனது பேட்டால் சுட்டுத் தள்ளுவார் போல நம்ம தல டோனி!