/tamil-ie/media/media_files/uploads/2017/12/z1078.jpg)
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி எதிர்பார்த்தது போலவே சிறப்பாக வெற்றிப் பெற்றது. இந்திய பிட்சுகளில் ஆஸ்திரேலியாவையே கதறவிடும் ரோஹித் ஷர்மா, இலங்கைக்கு ரத்தக் கண்ணீரையே ஒவ்வொரு முறையும் பரிசளித்துக் கொண்டிருக்கிறார். (இலங்கை ஃபீலிங் - நாங்களும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது!).
20 ஓவர்களில் 260 ரன்களை இந்திய அணி குவித்தது. ரோஹித் ஷர்மா 43 பந்துகளில் 118 ரன்கள் நொறுக்கினார். இதில் 13 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். மிகக் கடினமான இலக்கை துரத்திய இலங்கை 172 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது. மூன்றாவது போட்டி நாளை (டிசம்பர் 24) மும்பையில் நடைபெறுகிறது.
நேற்று சதம் விளாசி அவுட்டான உடனேயே, அடுத்ததாக தோனியை களமிறக்க வேண்டும் என்று ரோஹித் பெவிலியனில் இருக்கும் தலைமை கோச் ரவி சாஸ்திரியை நோக்கி காட்டும் செய்கை தற்போது வைரலாகி வருகிறது. என்ன செய்கை காண்பித்து தோனிய இறக்குங்கனு அணி நிர்வாகத்துக்கு ரோஹித் சிக்னல் தராருனு நீங்களே இந்த வீடியோவில் பாருங்க.
The BEST VIDEO you’ll see today!
Rohit Sharma demands Ms Dhoni to bat at No.3!
13 YEARS OF DHONISM pic.twitter.com/H1I81y0wRI
— Trends Dhoni ™ (@TrendsDhoni) 22 December 2017
— Cricket Videos (@CricketKaVideos) 22 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.