மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் நேர்காணலை தனது 15-வது வயதில் தான் கொடுத்தார். சச்சினின் அந்த முதல் பேட்டியை எடுத்தவர் டாம் ஆல்டர். 67 வயதான டாம் மும்பையில் உள்ள வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு (வெள்ளி) காலமானார்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் டாம் ஆல்டர் 4-ஆம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதன் காரணமாக அவர் உயிரிழந்து உள்ளார்.
இதுகுறித்து அவரது மகன் ஜேமி ஆல்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர், எழுத்தாளர், இயக்குனர், பத்ம ஸ்ரீ, எங்கள் இனிய கணவர், தந்தை டாம் ஆல்டர் காலமடைந்து விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சச்சினை முதன் முதலாக நேர்காணல் எடுத்த டாம் ஆல்டர் முசவ்ரியில் 1950-ஆம் ஆண்டு பிறந்தவர். மூன்றாம் அமெரிக்க தலைமுறையைச் சேர்ந்த இந்தியர். ஹிந்தி, மலையாளம், உருது, கன்னடம் என பல மொழிகளின் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சக்திமான், மாவீரன் ஹாத்திம் போன்ற எண்ணற்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்திருக்கிறார். 1980,90-களில் விளையாட்டு பத்திரிக்கையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 2008-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து மத்திய அரசு கவுரவித்தது.
ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட் ஆக இவர் பணியாற்றிய போதுதான், அப்போது 15 வயது சிறுவனாக இருந்த சச்சின் டெண்டுல்கரை இவர் முதன் முதலாக பேட்டி எடுத்தார்.
அந்தப் பேட்டியின் போது ஜேமி சச்சினிடம் கேட்ட சில கேள்விகள் இதோ,
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கு செல்ல நீங்கள் தேர்வாகிவிட்டால், நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களா அலல்து இன்னும் சில காலம் காத்திருக்க விரும்புவீர்களா?
அங்கு செல்ல இதுதான் சரியான நேரம்.
நீங்கள் மிகவும் இளவயதாக இருப்பதாக உணரவில்லையா?
இல்லை.
நீங்கள் வேகப்பந்து வீச்சாளரை சந்திக்க அதிகம் விரும்புகிறீர்களா?
ஆம்.
ஏன்?
நான் வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், அப்போதுதான் பந்து பேட்டிற்கு நேராக வரும்.
உங்கள் பள்ளி அணிக்காக நீங்கள் பந்து வீசுகிறீர்கள். என்ன மாதிரியான பவுலிங் உங்களுக்கு பிடிக்கும்?
மித வேகப்பந்து வீச்சு.
https://www.youtube.com/embed/1iWSo0rr-8M