Advertisment

ஸ்டேடியத்தில் உடைந்து அழுத கோலியின் பாகிஸ்தான் ரசிகை: அப்புறம் இலங்கை ரசிகைகளை கட்டிப்பிடித்து..!

Virat Kohli’s Beautiful Pakistan Fan Girl ‘Love Khaani’ meltdown during the Asia Cup 2022 final Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இலங்கை வீழ்த்திய நிலையில், விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகையான ‘லவ் கானி’ உடைந்து அழுதுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
Martin Jeyaraj
Sep 12, 2022 13:29 IST
Watch VIRAL Video: Kohli’s Pak Fan girl Love Khaani Heartbroken After Sri Lanka Win Asia Cup 202

Asia Cup 2022 : Sri Lanka vs Pakistan, Final - Virat Kohli’s Pakistan Fan Girl ‘Love Khaani’

Virat Kohli’s Pakistan Fan Girl ‘Love Khaani’ Tamil News: இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நேற்றிரவு துபாயில் நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

Advertisment

இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக அரைசதம் அடித்து அசத்திய பனுகா ராஜபக்ச 71* ரன்கள் எடுத்தார். அவருடன் சிறப்பான ஜோடியை அமைத்த ஹசரங்கா 36 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 171 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. மேலும், இலங்கை அணி விரித்த சுழல் வலையில் சிக்கிய பாகிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டது.

பாகிஸ்தான் அணி தரப்பில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் விளாசிய அரை சதம் (55) வீணானது. இலங்கை அணி தரப்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மிகச்சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி 6-வது முறையாக ஆசிய கோப்பையை முத்தமிட்டது.

ஸ்டேடியத்தில் உடைந்து அழுத கோலியின் பாகிஸ்தான் ரசிகை...

publive-image

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை இலங்கை வீழ்த்திய நிலையில், மைதானத்தில் இருந்த இலங்கை அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதற்கிடையில், மைதானத்தில் குழுமிருந்த பாகிஸ்தான் அணி ரசிகர்கள் சோக வெள்ளத்தில் மூழ்கினர். குறிப்பாக, விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகையான ‘லவ் கானி’ உடைந்து அழுதுள்ளார். பின்னர் அங்கிருந்த இலங்கை ரசிகைகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களை ஆரத்தழுவினார்.

‘லவ் கானி’ அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பேசியுள்ள ‘லவ் கானி’, ஆசிய கோப்பையை பாகிஸ்தான் வெல்ல முடியாவிட்டாலும், இந்தியா வென்றிருக்க வேண்டும், அது தனக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

#Viral Video #Cricket #Dubai #Sports #Social Media Viral #Viral #Virat Kohli #Asia #Viral News #Pakistan Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment