Advertisment

IND vs WI 5th T20 : சூரியகுமார் யாதவ் அரைசதம் வீண்; வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
Samson Chese

சஞ்சு சாம்சன் மற்றும் ரோஸ்டன் சேஸ்

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்ளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

Advertisment

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்று கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இதில் முதல் இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனால் இன்று நடைபெறும் 5-வது மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் என்ற நிலையில், இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 165 ரனகள் சேர்த்து இந்தியாவின் அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப்பை சமன் செய்தது. அதேபோல் திலக் வர்மா சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் பலர் சேர்த்து வருகின்றனர். அதேபோல் பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சஞ்சு சாம்சன் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?

எந்த வீரருக்கும் காயம் ஏற்படாத பட்சத்தில் கடைசி டி20 போட்டியில் இந்தியா அணியில் எந்த மாற்றமும் இருக்காது. இதுவரை அனைத்து போட்டிகளிலும் களமிறங்கியுள்ள சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இன்றைய போட்டியிலாவது அவர் ஃபார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ரோஸ்டன் சேஸ்

4-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்ட நிலையில், பந்துவீச்சு தாக்குதலுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அந்த அணியின் கேப்டன், ஆஃப்-ஸ்பின்னரை மீண்டும் அணிக்குக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் இடது கை வீரர்கள் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு பலத்திற்கு சேஸ் பொருத்தமான தேர்வாக இருக்கலாம்.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி டாஸ்வென்று முதலில் பேட்டிங்க் தேர்வு செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் களம் இறங்கினர். முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அகீல் ஹொசெய்ன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரை அடுத்து, சூர்யகுமார் யாதவ் களத்திற்கு வந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹொசெய்ன் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். 17 ரன்களுக்குள் ஜெய்ஸ்வால் சுப்மன் கில் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த நிலையில், திலக் வர்மா சூரியகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடினர்.

அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரோஸ்டன் சேஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இவரையடுத்து, சஞ்சு சாம்சன் களத்திற்கு வந்தார். 9 பந்துகளில் 13 ரன்கல் எடுத்த சஞ்சு சாம்சன், 10.2-வது ஓவரில் ரொமரியோ ஷெப்பர்ட் பந்தில் நிகோலஸ் பூரணிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 87 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யா சூரியகுமார் யாதவ் உடன் இணைந்தார். மறுமுனையில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடினார்.

ஹர்திக் பாண்ட்யா 14 ரன் எடுத்திருந்த நிலையில், ஷெப்பர்ட் பந்தில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரை அடுத்து அக்‌ஷர் பட்டேல் களத்திற்கு வந்தார்.

அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய சூரியகுமார் யாதவ் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்தில் எல்.பி.எடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்ஷ்தீப் சிங் 8 ரன்னில் ஷெப்பர்ட் பந்தில் போல்ட் அவுட் ஆனார். குல்தீப் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஷெப்பர் பந்தில் டக் அவுட் ஆனார். 13 ரன்கள் எடுத்திருந்த அக்‌ஷர் பட்டேல், ஹோல்டர் பந்தில் ஷெப்பர்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. சாஹல் ரன் எதுவும் எடுக்காமலும் முகேஷ் குமார் 4 ரன்களுடன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில், ஹொசெய்ன் , ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளும், ஷெப்பர்ட் 4 விக்கெடுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் களம் இறங்கினர். கைல் மேயர்ஸ் 10 ரன் எடுத்திருந்த நிலையில், ஹர்ஷ்தீப் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து வந்த நிகோலஸ் பூரண் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை எவ்வளவு முயன்றும் இந்திய பந்துவீச்சாளர்களால் பிரிக்கவே முடியவில்லை. அதிரடியாக விளையாடிய பிராண்டன் கிங் அரை சதம் அடித்தார். பிராண்டன் கிங் 38 பந்துகளில் 54 ரன்கள் உடனும் நிகோலஸ் பூரண் 32 பந்துகளில் 46 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 12.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்தபோது மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

மழை நின்ற பின் மிண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது 47 ரண்ட் எடுத்திருந்த நிகோலஸ் பூரண், திலக் வர்மா பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரை அடுத்து ஷாய் ஹோப் பிராண்டன் கிங் உடன் ஜோடி சேர்ந்தார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர் முடிவில், 171 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிராண்டன் கிங் 55 பந்துகளில் 85 ரன்கள் உடனும் ஷாய் ஹோப் 22 ரன்களுடனும் இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தன. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா கணிக்கப்பட்ட லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கே), சஞ்சு சாம்சன் (வி.கீ), குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

வெஸ்ட் இண்டீஸ் கணிக்கப்பட்ட லெவன்:

பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல் (கே), ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment