ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் நடந்த அதிசய நிகழ்வு!

ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளின் முடிவு தற்செயலாக ஒரே போன்று நிகழ்ந்துள்ளது

ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளின் முடிவு தற்செயலாக ஒரே போன்று நிகழ்ந்துள்ளது.

ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் வென்றது.

தற்போது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 9ம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், நேற்று(பிப்.11) இரண்டாவது ஒருநாள் போட்டியும் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டியிலும் ஆச்சர்யப்படும் வகையில் தற்செயலாக ஒரே மாதிரியான முடிவுகள் அமைந்துள்ளது.

அதாவது, முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. 334 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 154 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், இம்முறை டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 50 ஓவர்களில் அதே 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்தது. 334 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 154 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

1st ODI: Afg (333/5) beat Zim (179) by 154 runs

2nd ODI: Zim (333/5) beat Afg (179)
by 154 runs

இந்த இரண்டு போட்டிகளும் நடைபெற்றது ஷார்ஜாவில் தான்.

Coincidence இருக்கலாம்.. அதுக்குன்னு இவ்ளோ பெர்ஃபெக்டாவா!!

×Close
×Close