/tamil-ie/media/media_files/uploads/2017/10/hardik-pandya.jpg)
சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில், கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் கவர்ந்து பாராட்டுகளை பெற்றவர் ஹர்திக் பாண்டியா. தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், க்யூட் சர்ப்ரைஸ் பாராட்டும் அவருக்கு சமீபத்தில் கிடைத்தது. பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல் நிறுவனத்தின் ’அட்டர்லி பட்டர்லி’ கார்ட்டூனில் ஹர்திக் பாண்டியாவுக்காக கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. அதில், எப்போதுமே ஜாலியாகவும், கேலியாகவும் நடப்பு நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில், ’அமுல் பேபி’ சிறுமி கார்ட்டூன் இருக்கும். அந்தவகையில், அமுல் பேபி ஹர்திக் பாண்டியாவுடன் செல்ஃபி எடுப்பது போன்று விளம்பரம் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.
இதனால், மகிழ்ச்சியில் திளைத்த ஹர்திக் பாண்டியா, ”ஒரு லெஜண்டுடன் செல்ஃபி எடுப்பது எத்தனை பெரிய கௌரவம் #Amul Girl”, என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
What an honour to get a selfie with this legend #AmulGirl ???????? ✌???????? pic.twitter.com/EqusT5XogK
— hardik pandya (@hardikpandya7) 5 October 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.