/tamil-ie/media/media_files/uploads/2017/06/a488.jpg)
இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், மிகவும் சுமாரான பலம் கொண்ட பாகிஸ்தானை எளிதில் வென்ற இந்திய அணி, ஓவல் மைதானத்தில் நாளை இலங்கை அணிக்கு எதிராக களமிறங்குகிறது. இதுகுறித்து இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா, இலங்கை அணி வீரர்களுக்கு தெரிவித்துள்ள ஆலோசனையில், " "இந்தியாவிற்கு எதிரான போட்டியில், ஏஞ்சலோ மேத்யூஸ் களம் இறங்கவில்லை எனில், அது இலங்கையின் வெற்றி வாய்ப்பை கடுமையாக பாதிக்கும்.
எனவே, ஏஞ்சலோ மேத்யூஸ் உடல் தகுதி பெற வேண்டும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட உபுல் தரங்கா மீதான தடை மிகவும் மோசமானதாகும். அனுபவமிக்க லசித் மலிங்கா, ஸ்பின்னர்களை அதிகம் வைத்துக் கொண்டு ஓவர்களை வீச 39 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொண்டதை ஏற்க முடியாது.
EXCLUSIVE: @KumarSanga2 believes if a young Sri Lanka are to beat India they must play with arrogance!
➡️ https://t.co/0l2PRIPWt6pic.twitter.com/pRcZw1J6Og
— ICC (@ICC) 7 June 2017
இந்த இளம் இலங்கை அணி, ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக இளைஞர்களுக்கேயுரிய கர்வமான அலட்சியத்துடனும், திமிருடனும் ஆட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
இவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஆக்ரோஷமான ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை ஆட வேண்டும். இதனை செய்துவிட்டால், இந்திய அணிக்கு ஒரு அதிர்ச்சித் தோல்வியைத் தர முடியும். ஆனால் அன்று பாகிஸ்தானை மிகவும் தன்னம்பிக்கையுடன் வென்ற இந்திய அணிக்கு எதிராக இது மிகவும் கடினமான ஒரு விஷயமே" என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.