Advertisment

ரெய்னாவுக்கு ஃபோன் செய்து தகவல் கொடுத்த சாக்ஷி தோனி!

இப்போது படு சேட்டைக்காரியாக இருக்கும் ஜிவா பிறந்ததை, தோனியிடம் தெரிவித்ததே ரெய்னா தான் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரெய்னாவுக்கு ஃபோன் செய்து தகவல் கொடுத்த சாக்ஷி தோனி!

'எனக்கு பிறந்துள்ள குழந்தையை பார்ப்பதை விட, நாட்டுப் பணியே எனக்கு முக்கியம்' என கூறி கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை, 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது வென்றார் மகேந்திர சிங் தோனி.

Advertisment

2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. அப்போது நடப்பு சாம்பியனாக இருந்த இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் தோனி. அந்தத் தொடரில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி தொடங்கவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தோனிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்தது முதலில் தோனிக்கு தெரிவதற்கு முன்பு சுரேஷ் ரெய்னாவுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய்(முன்னாள் கிரிக்கெட்டர் திலீப் சர்தேசாய் மகன்) வெளியிட்டுள்ள புத்தகத்தில், "2015 உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் போது, தோனி மொபைல் எடுத்துச் செல்லவில்லை. இதனால், தோனியின் சக வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு, தோனியின் மனைவி சாக்ஷி, குழந்தை பிறந்திருப்பது குறித்து மெசேஜ் அனுப்பினார்.

இதைப் பார்த்த ரெய்னா தான், தோனியிடம் குழந்தை பிறந்த விஷயத்தைப் பற்றி முதன் முதலாக கூறினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

'தல' தோனியின் மகள் பெயர் ஜிவா. இப்போது படு சேட்டைக்காரியாக இருக்கும் ஜிவா பிறந்ததை, தோனியிடம் தெரிவித்ததே ரெய்னா தான் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அது இருக்கட்டும், குழந்தை பிறந்தபோது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், "உங்கள் குழந்தையை பார்க்க நாட்டுக்கு திரும்பவில்லையா?" என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தோனி என்ன பதில் அளித்தார் தெரியுமா?

"எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். ஆனால், இப்போது நான் நாட்டுப் பணியில் இருக்கிறேன். மத்ததெல்லாம் அதற்கு அப்புறம் தான். இப்போது உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம்" என்று கூறி, செய்தியாளர்களையே மிரள வைத்தார்.

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறினாலும், 'பச்சை சட்டை' போட்ட அனைத்து அணிகளையும் பந்தாடியது இந்திய அணி. இப்போது இந்திய அணியின் கேப்டனாக இல்லாவிட்டாலும், மக்களின் ஃபேவரைட் கேப்டனாக எப்போதும் அவர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பார் தோனி.

Suresh Raina
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment