22 யார்டுகளில் முதன்முறை சரிந்த பும்ரா – எதிரணி கேம்ப்பில் பயத்தை விதைக்க மறந்தது ஏன்?

இரண்டு டி20 போட்டிகளில், சூப்பர் ஓவரில் வாங்கிய அடியை பார்த்தவர்கள், 'என்னாச்சு இந்த பையனுக்கு!' என்ற பதற, அதன் நீட்சியை அன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் கண் கூடாக பார்க்க முடிந்தது.

By: Published: February 12, 2020, 5:49:20 PM

பும்ராவின் இன்றைய நாள், நிமிடம், நொடி சற்று கடினமாகத் தான் இருக்கும், இருக்கிறது. அவரது நான்கு வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், இப்படியொரு சரிவை அவர் சந்தித்ததில்லை. அதாவது, பெரும் தோல்வியை, விரக்தியை இப்போது தான் சந்தித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் எனும் அனுசரணையான தொட்டிலில் ஆடி பழக்கப்பட்டவர் முதன் முதலாக கீழே விழுந்திருக்கிறார்.

ஆம்! ஒரு நாள் தொடரில் உலகின் நம்பர் 1 பவுலர் பும்ரா, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. விளைவு, இன்று ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பும்ரா 719 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு பின்தங்க, இந்த தொடரில் கலந்தே கொள்ளாத நியூசிலாந்து வீரர் போல்ட் 727 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


பும்ராவின் ஆகப் பெரும் பலம் அவரது ‘Unorthodox Bowling’ என்று தான் இதுவரை நம்பப்பட்டு வந்தது. இன்னும் தொடருகிறது. ஆனால், அதுவே இப்போது அவருக்கு எதிராக திரும்புகிறதா என்ற சந்தேகம், இந்திய நிர்வாகத்தில் அசுர சப்தத்துடன் எழுந்திருக்கிறது.

பும்ராவின் கீழ் முதுகில் ஏற்பட்ட Stress Fracture காரணமாகத் தான் அவர் நீண்ட நாள் ஓய்வில் இருக்க வேண்டியிருந்தது. பும்ரா இந்த பாதிப்பில் சிக்கிய பிறகு ஒரு மிக முக்கிய பிஸியோவிடமிருந்து ஒரு மிக முக்கியமான ஸ்டேட்மென்ட்டை நம்மால் காண முடிந்தது. ஆனால், அன்று அது சீரியஸாக எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமே.

“why Bumrah’s unorthodox action may not be the reason for the injury?”

என்பதே அவர் முன் வைத்த கேள்வி. அந்த பிஸியோ Andrew Leipus. இந்திய அணியின் முன்னாள் பிஸியோ. அதுமட்டுமின்றி, ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்கு பல வருடம் பிஸியோவாக பணியாற்றியவர்.

பும்ராவின் பவுலிங் ஆக்ஷனே அவருக்கு காயம் ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாக ஏன் இருக்கக் கூடாது? என்ற தனது கேள்வியை ஒரு பயத்துடனேயே அவர் முன்வைத்தார்.

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பும்ரா எப்படி நியூசிலாந்து தொடரில் பந்து வீசினார்? ரிசல்ட் என்ன? அது தானே இங்கு முக்கியம்!

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரேயொரு விக்கெட். 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விக்கெட்டே இல்லை.

ஸோ, 8 போட்டிகளில் ஒரு விக்கெட். உலகின் நம்பர்.1 பவுலர் இப்படி பந்து வீசினார் என்று சொன்னால் அதை நம்ப முடியுமா?

நியூசிலாந்து தொடரில் அவரிடம் காண முடிந்த சிக்கல் நம்பிக்கையின்மை. அதாவது லெஸ் கான்ஃபிடன்ஸ். எந்த யார்க்கர்களில் இத்தனை காலம் பும்ராவின் வேகத்தையும், பலத்தையும் பார்த்தோமே, இந்த தொடரில் அதே யார்க்கரில் அவரது நம்பிக்கையின்மையை பார்க்க முடிந்தது.

ஆச்சர்யம் என்னவெனில், அவர் வீசிய யார்க்கர் ஒன்று அதீத ஆஃப் சைடில் செல்கிறது, இல்லையெனில், ஆதீத லெக் சைடில் செல்கிறது. மிடில் ஸ்டெம்ப்பை நோக்கிய அவரது குறி, அறிகுறி இல்லாமல் போனது.

காயத்தில் இருந்து மீண்டு வந்த பும்ரா ஃபிட்னஸ் கிளீயர் (?) செய்து தானே அணிக்குள் திரும்பினார். NCA சென்று பயிற்சி மேற்கொள்ளாமல், அவரே தனியாக ஒரு பிஸியோ நியமித்து, அவரிடம் பயிற்சி பெற்று, நேராக NCA சென்று பிட்னஸ் சர்டிபிகேட் வாங்கினார் என்று வந்த செய்திகள் கூட ‘சும்மாச்சுக்கும்’-னு வச்சுக்குவோமே!!

ஆனால், இந்த தொடரில் ரிசல்ட் என்ன? பும்ரா அசைத்த பைல்ஸ் எங்கே?

மூன்றாவது ஒருநாள் போட்டியின் இரண்டாவது ஸ்பெல்லை வீச பும்ரா அழைக்கப்படுகிறார். அப்போது நியூஸி., வெற்றிக்கு தேவை 72 பந்துகளில் 81 ரன்கள். களத்தில் நின்றது ஜிம்மி நீஷம், டாம் லாதம். இங்கு முக்கியமான விஷயம் என்னவெனில், அவர்கள் இருவரும் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

அந்த சூழலை, தடுமாற்றத்தை, பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ‘blockhole’-ஐ பஞ்சர் செய்வது தான் பும்ராவின் டிரேட் மார்க். ஆனால், அன்று அவர் அதை செய்யவில்லை. விக்கெட் வீழ்த்தவில்லை, டெத் பவுலிங்கில் ஆக்ரோஷம் காட்டவில்லை, யார்க்கர்களை டெலிவர் செய்ய முடியவில்லை, ஆகையால் இந்தியாவால் வெற்றிப் பெற முடியவில்லை.

இரண்டு டி20 போட்டிகளில், சூப்பர் ஓவரில் அவர் வாங்கிய அடியை பார்த்தவர்கள், ‘என்னாச்சு இந்த பையனுக்கு!’ என்ற பதற, அதன் நீட்சியை அன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் கண் கூடாக பார்க்க முடிந்தது.

பெரும் காயத்தில் இருந்து மீண்டு வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு Robust Rehabilitation Programme என்ற செயல்முறை போதிக்கப்படுவது உண்டு. இதன் மூலம் காயத்தில் இருந்து மீண்டவர்கள், மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக ஃபார்முக்கு வருவார்கள். அது இப்போது கட்டாயம் பும்ராவுக்கு தேவை.

பயம் தான் உண்மையிலேயே ஒரு பயங்கரமான உணர்ச்சி. காயத்தில் இருந்து மீண்டு வரும் ஒரு கிரிக்கெட் வீரர் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை இந்த பயம் தான்.

அதுவும் ஒரு பவுலராக இருக்கும் பட்சத்தில், களத்தில் மீண்டும் இறங்கும் போது பயம், பந்து வீச ஓடி வரும் போது பயம், பந்தை தனது கட்டுப்பாட்டில் வீச முடியுமா என்ற பயம், தனது முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியுமா என்ற பயம், அப்படி வெளிப்படுத்தியும் தன்னால் மீண்டும் பழைய மாதிரி பந்து வீச முடிகிறதா என்ற பயம், சரியாக வீசவில்லை என்றால் நம்மை பார்த்து சிரிப்பார்களே என்ற பயம்…. என்று இந்த பயத்தில் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

பும்ராவை நேசிக்கும் ரசிகர்களின் வேண்டுதல் பும்ரா இப்படியொரு பயத்தில் சிக்கிவிடக் கூடாது என்பதே.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Why bumrah cant make success against nz168669

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X