Advertisment

ICC Cricket World Cup 2019: உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற இந்த 5 அணிக்கு வாய்ப்புள்ளதா? உங்கள் கெஸ் என்ன?

2019 Cricket World Cup Teams & Squads: இவ்விரு வீரர்களின் வருகைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் 'நேர் கொண்ட பார்வை'-க்கு 90 டிகிரி ஆங்கிள் கிடைத்திருக்கிறது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
world cup cricket 2019 5 teams chances enter semi final - உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ள 5 அணிகள்! ஒரு பார்வை

world cup cricket 2019 5 teams chances enter semi final - உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ள 5 அணிகள்! ஒரு பார்வை

ICC Cricket World Cup 2019 Teams: உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில், அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ள ஐந்து அணிகள் குறித்த அலசல் இங்கே

Advertisment

இந்தியா

நிகழ் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்று இந்தியா. மேட்ச் விண்ணர்கள் அதிகம் இருக்கும் அணி இது. மேட்ச் விண்ணர்கள் என்றால், சும்மா சிக்ஸர்களும், பவுண்டரிகளும் மட்டும் அடிப்பவர்கள் அல்ல. சூழ்நிலைக்கு ஏற்றவாறு களத்தில் நின்று, அடித்து ஆடக் கூடியவர்கள். ஆனால், இங்கு பிரச்சனையே இங்கிலாந்து சூழியலை எந்த அளவிற்கு இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதே?.

தற்போது இங்கிலாந்து பிட்சுகள் பெரும்பாலும் ஃபிளாட்டாக இருப்பதால், ரன்கள் சேர்ப்பதில் இங்கு சிக்கல் இல்லை. ஆனால், இங்கிலாந்து கண்டிஷனில் அவ்வப் போது சூழும் மேக மூட்டங்களுக்கும் இடையேயும், வீசும் தென்றலுக்கு இடையேயும் மாறும் விக்கெட்டின் தன்மை, இந்திய பேட்ஸ்மேன்களை சோதித்துவிடுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இப்படிப்பட்ட வானிலையில் இந்தியா சிக்கிக் கொண்டால் அதோ கதி தான்!. மிடில் ஆர்டரில் நாம் தடுமாறுவது அப்போது மேலும் வெட்டவெளிச்சமாகும்.

இந்தியாவின் தடுமாறும் ஓப்பனிங் + இன் கன்சிஸ்டன்ஸி மிடில் ஆர்டர் ஆகியவை இந்தியாவுக்கு 5ம் அணியாகவே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தருகிறது.

நியூசிலாந்து

நியூசிலாந்தின் பலம் - சரிவிகித கலவையான அணி. ஆம்,

தொடக்க அதிரடி,

நிலைத்து நிற்கும் மிடில் ஆர்டர்,

லோ ஆர்டரில் சிக்சர்களை விளாசும் பேட்டிங் ஆல் ரவுண்டர்ஸ்,

லைன் அன்ட் லென்த் ஃபேஸ் பவுலர்ஸ் 

டீசன்ட் ஸ்பின் ஆப்ஷன் 

என்று மிக்ஸிங் பிரமாதமாக உள்ளது. பயிற்சிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்தியாவை டோட்டலாக வீழ்த்திய நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது. கேன் வில்லியம்சன் எனும் பதட்டப்படாத கேப்டன் இவர்களில் கூடுதல் பிளஸ்.

மோஸ்ட் சீனியர் பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் போட்டி நடைபெறும் நாளன்று நிலைத்து ஆடிவிட்டால் போதும், மற்றதை மற்ற வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள். வெற்றி எளிதில் வசப்படும்.

ஆஸ்திரேலியா

'உலக சாம்பியன்' ஆஸ்திரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் பெர்ஃபாமன்ஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதலபாதாளத்தில் இருந்தது நாம் அறிந்ததே. மேலெழும்பி வர 18 மாதங்களுக்கும் மேலாக முக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது கள நிலவரம் சற்று கலவரமாகவே உருமாறியிருக்கிறது.

டேவிட் வார்னர்,

ஸ்டீவன் ஸ்மித்

ஆகிய இவ்விரு வீரர்களின் வருகைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் 'நேர் கொண்ட பார்வை'-க்கு 90 டிகிரி ஆங்கிள் கிடைத்திருக்கிறது. அதன் முதல் எதிரொலியை இங்கிலாந்துக்கு எதிரான பயற்சிப் போட்டியில் ஸ்மித்தின் சதம் மூலம் நம்மால் காண முடிந்தது. அந்தப் போட்டியில் மெகா பலம் பொருந்திய இங்கிலாந்தையும் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

கேப்டன் ஆரோன் ஃபின்ச்சின் ஃபார்ம் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் ஒரே சிக்கல். ஐபிஎல்-ல் 'rash driving' நடத்திய டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், 'X Factor' மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரே என்று பேட்டிங்கில் பலம் காட்டும் ஆஸி., மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்சன், 'பவுன்ஸ்' பெஹ்ரென்டோர்ஃப், கோல்டர் நைல், நாதன் லயன், ஆடம் ஜம்பா என்று பலம் வாய்ந்த பென்ச்சை களமிறக்கியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ்

இந்த தலைப்பு சற்று ஆச்சர்ய பதிவுகளை உள்ளடக்கியது. மாடர்ன் கிரிக்கெட்டில் இவர்களின் பக்கங்கள் பெரும்பாலும் தோல்வி பதிவுகளையே எழுதி இருக்கிறது. ஆனால், இம்முறை அவர்களின் நிலைமை அப்படியாக இருக்கப் போவதில்லை. தங்களின் உச்சக்கட்ட பலம் வாய்ந்த அணியை களமிறக்கியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் எனும் விண்டீஸ் அணி.

க்றிஸ் கெயில், ஷாய் ஹோப், எவின் லெவிஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், ஆந்த்ரே ரசல், கார்லஸ் பிரத்வெயிட், நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் எனும் மெகா பேட்டிங் லைன் அப்-ஐ களமிறக்கியுள்ளது. மேற்கு இந்தியர்கள் சிக்ஸர்கள் மட்டுமே அடிப்பார்கள், சிங்கிள்ஸ் எடுக்க தெரியாது, அணியின் சரிவை தடுத்து நிறுத்தத் தெரியாது என இம்முறை கூற முடியாது. ஷாய் ஹோப், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர்... ஏன் க்றிஸ் கெயிலே இப்போது சூழ்நிலைக்கு ஏற்ப ஆடத் துவங்கிவிட்டார். ஐபிஎல்-லையும் கடந்து ஆந்த்ரே ரசலின் காட்டடி உலகக் கோப்பையிலும் தொடர்கிறது.

பந்துவீச்சிலும் பலமாக இருந்தாலும், தாறுமாறான பவுன்ஸ், லைன் அன்ட் லென்த் இல்லாத ஃபேஸ் இவர்களின் பலவீனமே, பட், அதை பேட்டிங்கில் ஓவர்டேக் செய்துவிடுகிறார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், லிமிட்டட் வெர்ஷன் கிரிக்கெட்டில் அன் லிமிட்டட் அதிரடி காட்ட காத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ்.

இங்கிலாந்து

இந்த அணியைப் பற்றி பெரிதாக நாம அலச தேவையில்லை. இங்க இருக்குறது பூராவும் 'தேவையான ஆணி' தான்.

இயான் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், மொயீன் அலி, க்றிஸ் வோக்ஸ் என்று அந்த அணி அதிபயங்கரமாக பீதியை ஏற்படுத்திக் கொண்டிருக்க, போதாத குறைக்கு ஜோஃப்ரா ஆர்ச்சரையும் உலகக் கோப்பையில் சேர்த்துவிட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர், ஆசிய கண்டிஷனில் எலி என்றாலும், உள்ளூரில் புலியாக இருப்பதால், இவர்களை மீறி ஒரு அணி கோப்பை வெல்கிறது என்றால், அது வேற லெவல் கொண்ட அணியாக இருக்க வேண்டும்.

அது இந்தியாவா, வெஸ்ட் இண்டீஸா, ஆஸ்திரேலியாவா, நியூசிலாந்தா இல்லை வேறொரு அணியா என்பதே கேள்வி. தென்னாப்பிரிக்கா நமது டாப் 5 லிஸ்டில் இல்லையென்றாலும், அவர்களும் செமி ஃபைனல் ரேஸில் உள்ளார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment