Advertisment

உலககோப்பை கிரிக்கெட் : தென் ஆப்ரிக்காவிற்கு வங்கதேசம் ஷாக் டிரீட்மென்ட்

வங்கதேச அணி, தென் ஆப்ரிக்க அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்ரிக்க ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
worldcup cricket, southafrica, bangladesh, indian cricket team, virat kohli, dhoni, england, runs, உலககோப்பை கிரிக்கெட், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், இந்திய கிரிக்கெட் அணி, விராட் கோஹ்லி, தோனி, இங்கிலாந்து, ரன்கள்.

worldcup cricket, southafrica, bangladesh, indian cricket team, virat kohli, dhoni, england, runs, உலககோப்பை கிரிக்கெட், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், இந்திய கிரிக்கெட் அணி, விராட் கோஹ்லி, தோனி, இங்கிலாந்து, ரன்கள்.

உலககோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், வங்கதேச அணி, தென் ஆப்ரிக்க அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்ரிக்க ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

உலககோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று ( ஜூன் 2ம் தேதி) நடந்த போட்டியில், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க அணியும், 7வது இடத்தில் உள்ள வங்கதேச அணியும் மோதின.

டாஸ் வென்ற தெ.ஆ. கேப்டன் டுபிளசி பவுலிங்கை தேர்வு செய்தார்.

நிதான ஆட்டம் : வங்கதேச அணி நிதான ஆட்டத்தை மேற்கொண்டது. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. முஸ்பிகுர் ரகுமான் 78 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 75 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்ரிக்க தரப்பில், இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் மற்றும் ஆன்டிலி பெலுக்வாயோ தஙா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

331 ரன்கள் என்ற கடின இலக்கு

331 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்களை பறிகொடுத்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 309 ரன்கள் மட்டுமே, தென் ஆப்ரிக்க அணியால் எடுக்க முடிந்தது. கேப்டன் டுபிளசி, அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி பெற்றது.

100 வது போட்டி : நேற்றைய போட்டி, தென் ஆப்ரிக்காவின் ஸ்பின் பவுலர் இம்ரான் தாஹிருக்கு 100வது போட்டி ஆகும். இந்த இலக்கை எட்டிய இரண்டாவது ஸ்பின் பவுலர் என்ற பெருமையை தாஹிர் பெறுகிறார். நிக்கி போயே, 113 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதிகபட்ச ரன் (330 ரன்கள்)

வங்கதேச அணி ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அடிக்கும் அதிகபட்ச ரன் இதுவே ஆகும் இதற்குமுன்னர், 2015ல் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் 329 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment