Advertisment

இந்திய "சுழலில்" வீழ்ந்தது வங்கதேசம்: ‘லைவ்’ ஸ்கோர் கார்ட்

குல்தீப், சஹலின் சுழல் ஜாலத்தால் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வங்கதேச அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india vs pakistan live score

india vs pakistan live score

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில், சுழல் மன்னர்களின் ஜாலத்தால் வங்கதேச அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா.

Advertisment

இந்தியா 359 ரன்கள்

டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்கள் சரிந்தன. ஷிகர் தவான் 1 ரன்னிலும், ரோஹித் ஷர்மா 19 ரன்களிலும், கேப்டன் கோஹ்லி 47 ரன்களிலும், விஜய் சங்கர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில், 102 ரன்களுக்கு 4 விக்கெட்கள் பறிகொடுத்து இந்திய அணி திணறி கொண்டிருந்த நிலையில், கே.எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் தோனி...

5வது விக்கெட்டுக்கு 167 ரன்கள்

வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை நிதானமாக கையாண்ட தோனி - ராகுல் ஜோடி, 5விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 167 ரன்கள் எடுத்தனர், இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ராகுல் 108 ரன்களில் வெளியேறினார். தோனி, 73 ரன்களில் சதமடித்து அசத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது.

வங்கதேசம் நிதான ஆட்டம்

இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நிதானமான கையாண்ட வங்கதேச பேட்ஸ்மேன்கள் ஓவருக்கு ஏற்றவாறு ரன்கள் சேர்த்து வந்தனர், விக்கெட்களும் சீரான இடைவெளியில் விழுந்தன. 21 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 105 ரன்கள் எடுத்திருந்த்து வங்கதேசம்.

சுழல் ஜாலம்

குல்தீப் யாதவ், சஹலின் சுழல் ஜாலம் தனது வேலையை காட்ட அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வங்கதேச அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் , சஹல் தலா 3 விக்கெட்களும், பும்ரா 2 விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டுவிட்டர் கிரவுண்டிலும் வெளுத்து கட்டிய தோனி

வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி போட்டியில், இந்தியாவின் தோனி மற்றும் ராகுலின் 5 விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இந்தியா 359 ரன்கள் எடுக்க உதவியது.

ராகுல், 94 பந்துகளில் சதமடித்தார் ; தோனி 73 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

டுவிட்டரில் தோனி ரசிகர்கள், தோனியின் பேட்டிங்கை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

பிரபுவின் டுவிட்

அபர்ணாவின் டுவிட்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment