Advertisment

இது 6-வது முறை; அஸ்வின் மாதிரி இந்திய கிரிக்கெட்டில் அவமானம் சந்தித்தவர் யாரும் இல்லை: கவாஸ்கர்

'ஐ.சி.சி தரவரிசையின்படி, பந்துவீச்சாளர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்த அஸ்வினை இந்தியா ஆடும் லெவன் அணியில் சேர்க்கவில்லை' என்று ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sunil Gavaskar slammed, No other Indian cricketer treated as badly as R Ashwin Tamil News

Ravichandran Ashwin

WTC Final 2023 - Sunil Gavaskar - R Ashwin Tamil News: ஐசிசி நடத்திய 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Advertisment

அஸ்வின் இல்லை

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக இடம்பிடித்துள்ள அஸ்வின் 470 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் போது, ​​அவர் 3வது அதிக விக்கெட் எடுத்தவர் மற்றும் இடது கை பேட்டர்களுக்கு எதிராக ஆபத்தானவராகவும் கருதப்படுகிறார். ஆஸ்திரேலியா அணியின் ஆடும் லெவனில் 5 இடது கை பேட்டர்கள் உள்ளனர்.

publive-image

ஆனாலும், அவரை ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழல் காரணமாக அணியில் சேர்க்கவில்லை என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே கூறியிருந்தார். இருப்பினும், அஸ்வினை அணியில் சேர்க்காததற்கு எதிர்ப்புகள் வலுத்தன. அவர் இல்லாத அணி தோல்வியடைந்த நிலையில், அந்த எதிர்ப்புகள் மேலும் வலுத்துள்ளன. இதுகுறித்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கவாஸ்கர் காட்டம்

இந்த நிலையில், அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

மிட்-டே இதழில் சுனில் கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், "ஐசிசி தரவரிசையின்படி, பந்துவீச்சாளர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினை இந்தியா ஆடும் லெவன் அணியில் சேர்க்கவில்லை. ஆஸ்திரேலிய அணியில் 5 இடது கை வீரர்கள் இருந்தனர் மற்றும் ஒரு இடது கை வீரரான டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் விரைவான சதம் அடித்தார். மற்றொரு இடது கை வீரரான அலெக்ஸ் கேரி முதல் இன்னிங்ஸில் 48 ரன்களும், 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 66 ரன்களும் எடுத்தார். அந்த இரண்டாவது இன்னிங்ஸ் முயற்சியின் போது, ​ஆஸ்திரேலியாவை சாதாரணமாக ஆட்டமிழக்க செய்து விடலாம் என இந்தியா எதிர்பார்த்த நேரத்தில், அலெக்ஸ் கேரி மற்றொரு இடது கை வீரரான மிட்செல் ஸ்டார்க்குடன் ஜோடி அமைத்து 93 ரன்கள் எடுத்தார்.

publive-image

அஸ்வின் அணியில் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்பது யாருக்குத் தெரியும். பேட்டிங்கிலும் அவர் பங்களித்திருக்கலாம். நவீன யுகத்தில் வேறு எந்த உயர்தர இந்திய கிரிக்கெட் வீரரும் அஸ்வின் போல் படு குழப்பமான அல்லது படு மோசமான முறையில் நடத்தப்படவில்லை. ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 பேட்டர் அணியில் இருந்திருந்தால், முந்தைய காலங்களில் புல் நிறைந்த ஆடுகளத்தில் ரன்களை எடுக்கவில்லை என்ற காரணத்தினாலோ அல்லது ஒரு மைதானத்தில் ரன் எடுக்காமல் இருந்தாலோ, விளையாடும் லெவன் அணியில் இருந்து வெளியேறியிருப்பாரா என்று சொல்லுங்கள். வறண்ட ஆடுகளம் சுழலுக்கு உகந்த ஆடுகளமா? நிச்சயமாக இல்லை." என்று எழுதியுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த டெஸ்டில் இருந்து அஸ்வின் நீக்கப்படுவது இது ஆறாவது முறையாகும். முன்னதாக, 2021ல் இந்தியாவின் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது, ​​அவர் ஒரு போட்டியில் கூட இடம்பெறவில்லை. இங்கிலாந்தில் அவர் கடைசியாக 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Vs Australia Sports Cricket Indian Cricket Team World Test Championship Indian Cricket Ravichandran Ashwin Bcci Sunil Gavaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment