ச. மார்ட்டின் ஜெயராஜ்
India Vs Australia WTC Final 2023 Tamil News: 2022 – 23 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதுவது வழக்கம். அதன்படி, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்தியாவுக்கு இந்த பவுலிங் படை போதுமா?
இந்தப் போட்டியில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடாது. அதற்குப் பதிலாக, 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமாடலாம். ஏனென்றால், 2021 ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் என அஷ்வின் மற்றும் ஜடேஜாவுடன் விளையாடிது. எனினும், இந்தக் கூட்டணியின் பந்துவீச்சு அப்போது போதுமானதாக இல்லை. இதில், அஸ்வின் சிறப்பாக பந்துவீசி இருந்தார். 2 இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேநேரம், ஜடேஜாவால் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
இதையும் படியுங்கள்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா vs ஆஸ்திரேலியா மோதும் தேதி, இடம், ரிசர்வ் டே விவரம்
பெருமைப்பாலும், இங்கிலாந்தில் உள்ள மைதானங்களின் சூழல் திடீர் திடீரென மாறுபடும். ஆடுகளமும் அதற்கு ஏற்றார்போல் மந்தமாகவும், சீமிங் சூழ்நிலை அதிகமும் இருக்கும். இதனால் தான் என்னவோ, நியூசிலாந்து அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு மீடியம் -ஃபாஸ்ட் போடக்கூடிய கொலின் டி கிராண்ட்ஹோமுடன் களமாடியது. ஆனால், இந்திய அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர்.
இந்த போட்டிக்குப் பிறகு, இந்தியா இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச மண்ணில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்த போட்டிகளில் 3-2 என்ற வேகப்பந்து சுழற்பந்து கூட்டணியில் களமிறங்கவில்லை. பதிலாக, 4-1 என்ற பந்துவீச்சு வரிசையில், அஸ்வினை கழற்றி விட்டு, பேட்டிங் பந்துவீச்சுக்கு ஜடேஜா கை கொடுப்பார் என அவரை மட்டும் தக்கவைத்துக் கொண்டது.

அந்த 4-1 பந்துவீச்சு தாக்குதலின் மூலம் இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. எனவே, ஓவலில் நடக்கும் போட்டியிலும் இந்தியா அத்தகைய பந்துவீச்சு தாக்குதலை தொடுக்க முயற்சிக்கும். ஆனால், அணிக்கு பெரும் பின்னடைவாக வேகப்புயல் ஜஸ்பிரித் பும்ரா, இப்போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. இதனால், 2021ல் லார்ட்ஸ் மற்றும் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு 4 பேர் கொண்ட சீம் தாக்குதலைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கலாம்.
இதையும் படியுங்கள்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா vs ஆஸ்திரேலியா மோதும் தேதி, இடம், ரிசர்வ் டே விவரம்
ஆதலால், இந்தியா சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரையும் களமிறக்கலாம். அவர்கள் புதிய பந்தில் ஆட்டத்தின் ஆரம்பத்திலே விக்கெட்டுகளை சாய்த்து அசத்ததும் திறன் பெற்றவர்களாக உள்ளனர். அவர்களுடன் உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோரில் இருவரை தேர்வு செய்யலாம். உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் இங்கிலாந்து மண்ணில் பந்துவீசிய அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர்.
கடைசியாக 2018ல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, 4வது சீமராக இருக்க முடியும். அவர் ஆல்ரவுண்டராக இருப்பது அணிக்கு கூடுதல் பலம் தரும். ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள முதல் 3 வீரர்கள் பார்டர்-கவாஸ்கர் தொடரில் அதிக ஓவர்கள் வீசவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களே அதிக ஓவர்களை வீசி இருந்தனர். மற்ற 3 வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இடையில், இந்திய வீரர்கள் எந்த விதமான ரெட்-பால் கிரிக்கெட்டையும் விளையாட போவதில்லை. அவர்களில் பெரும்பாலோர் ஐ.பி.எல் தொடரில் அந்த ஃபார்மெட்டுக்கு ஏற்ப பந்துவீச உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, 4 பேர் கொண்ட வேகத் தாக்குதலை இந்தியா எவ்வாறு ஒன்றிணைக்கும் என்பதைப் பார்ப்பது கடினம். எனவே, அவர்கள் மீண்டும் 3-2 என்ற பந்துவீச்சு வரிசையில் செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. மேலும் அஷ்வின் மற்றும் ஜடேஜா அவர்களின் பந்துவீச்சுக்கு மிகவும் பொருத்தமற்ற சூழ்நிலைகளில் கூட கட்டுப்பாட்டை வழங்குவார்கள் என்றும் நம்பலாம்.
இதையும் படியுங்கள்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா vs ஆஸ்திரேலியா மோதும் தேதி, இடம், ரிசர்வ் டே விவரம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil