Advertisment

கடைசி போட்டியில் டிரா… பறிப்போன புள்ளிகள்: WTC புள்ளிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 2 போட்டிகளில் 1ல் வெற்றி, 1ல் டிரா கண்டுள்ள இந்திய அணி 2வது இடத்துக்கு (66.67%) சரிந்தது.

author-image
WebDesk
New Update
WTC Points Table after West Indies 2nd Test draw against India Tamil News

 Updated WTC Points Table After West Indies Series Tamil News: 2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வரும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

Advertisment
publive-image

ஆனால், 2வது டெஸ்ட் போட்டிக்கான கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறாததால் போட்டி டிரா ஆனது. இதன் மூலம் இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் 2 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 1 டிரா கண்டுள்ள இந்திய அணி 2வது இடத்துக்கு (66.67%) சரிந்தது.

பாகிஸ்தான் அணி 1 ஆட்டத்தில் ஆடி வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி (100%) முதல் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா (54.17%) 3வது இடத்திலும், இங்கிலாந்து (29.17%) 4வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி (16.67%) 5வது இடத்திலும், இலங்கை (0%) 6வது இடத்திலும் உள்ளன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket World Test Championship India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment