Advertisment

ஐ.பி.எல் ஏலத்தில் பழைய விலைக்கே வாங்கப்பட்ட ஜெய்ஸ்வால்: ராஜஸ்தானுக்கு மட்டும் அல்ல… இந்திய அணிக்கும் நம்பிக்கை!

நடப்பு சீசனில் பேட்டிங்கில் கலக்கி வரும் ஜெய்ஸ்வால் 12 போட்டிகளில் 575 ரன்கள் வரை குவித்து, ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தும் போட்டியில் உள்ளார்.

author-image
Martin Jeyaraj
May 12, 2023 13:00 IST
Yashasvi Jaiswal's salary in IPL 2023? Tamil News

Yashasvi Jaiswal - Kolkata Knight Riders vs Rajasthan Royals, 56th Match IPL 2023

IPL 2023, Rajasthan Royals Yashasvi Jaiswal Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்தார். தொடர்ந்து கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரன்மழை பொழிந்த ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 98 ரன்களை வரை குவித்தார்.

Advertisment
publive-image

ஐ.பி.எல் அறிமுகம் - விலை

21 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். அதே ஆண்டில் நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால், ஐ.பி.எல் ஏலத்தில் அவரை வாங்க அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. முடிவில் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 2.4 கோடிக்கு வாங்கியது. அந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் 40 ரன்கள் எடுத்து இருந்தார்.

publive-image

2021 சீசனில் அதிரடியாக விளையாடிய அவர் 10 போட்டிகளில் 249 ரன்கள் எடுத்தார். 2022 சீசனில் ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி குஜராத் அணியிடம் சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தது. அந்த சீசனில் ஜெய்ஸ்வால் 10 போட்டிகளில் 258 ரன்கள் வரை எடுத்து இருந்தார். இந்த சீசனுக்கு முன்னதாக நடந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் அவரை ராஜஸ்தான் அணி ரூ.4 கோடி கொடுத்து தக்கவைத்து. தொடர்ந்து நடப்பு சீசனுக்கும் அவருக்கு அதே விலையை கொடுத்து தக்கவைத்தது.

ஆரஞ்சு தொப்பி

இந்த சீசனில் பேட்டிங்கில் கலக்கி வரும் ஜெய்ஸ்வால் 12 போட்டிகளில் 575 ரன்கள் வரை குவித்துள்ளார். ஆரஞ்சு தொப்பியை வசப்படுத்தும் போட்டியில் ஆர்.பி.சி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸை (576 ரன்கள்) விட ஒரு ரன்கள் குறைவாக எடுத்து 2வது இடத்தில் கடும் போட்டியாளராக இருந்து வருகிறார். நடப்பு சீசனில் டெல்லி அணிக்கு எதிராக 31 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த அவர் மும்பை அணிக்கு எதிராக தனது முதல் ஐ.பி.எல் சதத்தை பதிவு செய்து 124 ரன்கள் வரை குவித்து இருந்தார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் அணிக்கும் நம்பிக்கை தரும் வகையில் அமைத்துள்ளது.

பேட்டி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பேசிய ஜெய்ஸ்வால், "மைதானத்தில் களமிறங்கி நன்றாக விளையாட வேண்டும் என்கிற எண்ணம் எப்பொழுதும் என் மனதில் இருக்கிறது. இன்று இது ஒரு இனிமையான உணர்வாக உள்ளது. நான் விரும்பிய அனைத்தும் நடப்பது போல் இல்லை என்றாலும், நான் அதற்காக நன்றாக தயார் செய்கிறேன். என்னையே நான் நம்புகிறேன். அதற்கு ஏற்றாற்போல் முடிவுகள் வரும் என்று எனக்குத் தெரியும்.

publive-image

வின்னிங் ஷாட் ஒரு சிறந்த உணர்வு. நான் விளையாட்டை முடிக்க விரும்பினேன். இந்தப் போட்டியை வெல்வதே எனது குறிக்கோளாக இருந்தது. நான் ஆசீர்வதிக்கப்பட்டேன் மற்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். (சதத்தை தவறவிட்டது குறித்து) அணியின் நெட் ரன் ரேட் மட்டுமே எங்கள் மனதில் இருந்தது. நானும் சஞ்சுவும் விளையாட்டை விரைவாக முடிக்க வேண்டும் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம்." என்றும் அவர் கூறினார்.

3வது இடத்தில் ராஜஸ்தான்

இந்த ஆட்டத்தில் 150 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 98 ரன்களுடனும், கேப்டன் சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். தற்போது ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

#Cricket #Sports #Kolkata #Rajasthan Royals #Kolkata Knight Riders #Ipl News #Ipl Cricket #Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment