சச்சினுக்கு வந்த நண்பர்கள் தின வாழ்த்து: இதுதான் கிரிக்கெட் 'ஷோலே'!

களத்தில் நீதான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்... ஆனால்,

Friendship day: இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சச்சினின் பால்ய கால நண்பருமான வினோத் காம்ப்ளி, சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறுவயது முதல் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து கிரிக்கெட் ஆடியவர் வினோத் காம்ப்ளி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருவரும் அப்போதிலிருந்து இப்போது வரை நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

சமீபத்தில், 19 வயதுக்கு உட்பட்டவருக்கான அணியில் ஆடிய சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தனது முதல் சர்வதேச விக்கெட் வீழ்த்திய போது, வினோத் காம்ப்ளி நெகிழ்ச்சியுடன் அவரைப் பாராட்டினார்.

”அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் சர்வதேச விக்கெட்டைப் பார்க்கும்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. இதைக் காட்டிலும் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் வேறு இல்லை.” என்று வாழ்த்தியிருந்தார்.

அந்தளவிற்கு சச்சினின் குடும்பத்துடன் இன்னமும் அவர் நெருக்கமாக உள்ளார். இந்நிலையில், இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், பிரபல பாலிவுட் திரைப்படமான ‘ஷோலே’வில் வரும் ஜெய் மற்றும் வீர் கதாபாத்திரங்களை கம்பேர் செய்து, தனது பால்ய நண்பன் சச்சினுக்கு,  வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் காம்ப்ளி.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், “களத்தில் நீதான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்… களத்திற்கு வெளியே நீ ஜெய்.. நான் தான் வீர். நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பா” என்று காம்ப்ளி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close