/tamil-ie/media/media_files/uploads/2017/10/z551.jpg)
Dhoni Running speed
உலக கிரிக்கெட் வரலாற்றில் என்றும், எப்போதும் அதிவேகமாக ரன்னிங் ஓடும் டாப்-3 வீரர்கள் பட்டியலில், தோனியின் பெயர் நிச்சயம் இருக்கும். அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் தோனி.
குவஹாத்தியில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணிக்காக இரண்டு ரன்களை எடுக்க தோனி ஓடினார். அப்போது 22-யார்டு அளவு கொண்ட விக்கெட்டின் இடைவெளியில் 31 kmph வேகத்தில் தோனி ஓடியிருப்பதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
Outrunning @msdhoni seems impossible! Catch the analysis on his ⚡️-quick runs on #NerolacCricketLive on Oct 13 on Star Sports. pic.twitter.com/rPbtbmsKES
— Star Sports (@StarSportsIndia) 11 October 2017
மேலும், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் யோ-யோ டெஸ்ட்டிலும் தோனி அசத்தியிருக்கிறார். அதில், 20மீ நீளம் கொண்ட யார்டில், முதலாவது ரன்னை வெறும் 2.91 நொடிகளில் நிறைவு செய்த தோனி, மூன்றாவது ரன்னை 8.30 நொடிகளில் முடித்தார்.
36 வயதை நிறைவு செய்திருக்கும் தோனி, வயது என்பது தன்னை பொறுத்தவரை வெறும் எண்கள் மட்டுமே என்பதை நிரூபித்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.