Advertisment

இளம் செஸ் வீரர்களுடன் சாஹல்… கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா?

'செஸ் ஆடுவதும், கிரிக்கெட் விளையாடுவதும் ஒரே மாதிரியானவை. கிரிக்கெட்டில் ஆக்ரோஷத்தை காட்டலாம். ஆனால் செஸ்ஸில் உங்களால் முடியாது.' என்று யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Yuzvendra Chahal Global Chess SG Alpine Warriors

குளோபல் செஸ் லீக் | எஸ்.ஜி அல்பைன் வாரியர்ஸ் அணியின் டி குகேஷ் (வலமிருந்து இரண்டாவது), அர்ஜுன் எரிகைசி (வலது) மற்றும் பிரக்ஞானந்தா (இடது) ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்.

இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்துவீச்சாளராக விளையாடி வருபவர் யுஸ்வேந்திர சாஹல். 32 வயதான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 72 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்தமாக 212 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐ.பி.ல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முன்னணி வீரராகவும் சாஹல் விளையாடி வருகிறார்.

Advertisment

இந்நிலையில், சாஹல் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் குளோபல் செஸ் லீக் தொடருக்கான எஸ்.ஜி அல்பைன் வாரியர்ஸ் அணியின் டி குகேஷ், அர்ஜுன் எரிகைசி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோருடன் இருக்கிறார்.

இதனால், அந்த தொடரில் சாஹலும் விளையாடுகிறார் போலும் என புரிந்து கொண்ட ரசிகர்கள், அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறாரா என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். இருப்பினும் சாஹல், எஸ்.ஜி அல்பைன் வாரியர்ஸ் அணிக்கு தனது ஆதரவை வாங்குவதாக அவரது கேப்டசனில் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது குளோபல் செஸ் லீக் போட்டிகள் துபாயில் ஜூன் 21 முதல் ஜூலை 2 வரை நடக்கிறது. 6 அணிகள் களமாடியுள்ள இந்த தொடரில் உலகின் முன்னணி செஸ் வீரர்கள் கூட்டாக போட்டியிடுகின்றனர். விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சென், இயன் நெபோம்னியாச்சி மற்றும் லெவ்ரான் அரோனியன் ஆகியோர் போன்ற உலக சாம்பியன்கள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளனர்.

சாஹல் ஆதரவு கொடுக்கும் எஸ்ஜி ஆல்பைன் வாரியர்ஸ் அணியில் இளம் கிராண்ட்மாஸ்டர்களான டி குகேஷ், அர்ஜுன் எரிகைசி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் உள்ளனர். இந்த அணியை முன்னாள் உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சென் வழிநடத்துகிறார்.

publive-image

செஸ் வீரர் சாஹல்

இந்திய வீரரான யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் மைதானத்தில் சுழற் பந்துகளை வீசுவதற்கு முன்பு, அவர் ஒரு செஸ் வீரர் ஆவார். யுசி உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியில் விளையாடினார். மேலும் விக்கிபீடியாவின் படி, அவர் 'உலக செஸ் கூட்டமைப்பின் (FIDE) அதிகாரப்பூர்வ தளத்தில்' பட்டியலிடப்பட்டுள்ளார். சமீபத்திய மதிப்பீடுகளின்படி, சாஹலின் மதிப்பீடு 1956 ஆகும்.

சாஹல் தனது செஸ் அனுபவம் குறித்து பேசுகையில், "எனது முதல் ஜெர்சி செஸ் விளையாடியதில் இருந்து தான் வந்தது. பல ஆண்டுகளாக இந்த விளையாட்டு எனக்கு பொறுமையைக் கற்றுக் கொடுத்தது. அது எனது கிரிக்கெட்டில் எனக்கு உதவுகிறது. ஏனென்றால் சில நேரங்களில் நீங்கள் நன்றாகப் பந்துவீசலாம். ஆனால் விக்கெட் கிடைக்காமல் போகலாம். அப்போதுதான் பொறுமை தேவை.

செஸ் ஆடுவதும், கிரிக்கெட் விளையாடுவதும் ஒரே மாதிரியானவை. கிரிக்கெட்டில் ஆக்ரோஷத்தை காட்டலாம். ஆனால் செஸ்ஸில்உங்களால் முடியாது. செஸ் நீங்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, நான் பந்துவீசினால், நான் பேட்ஸ்மேனிடம் ஏதாவது சொல்ல முடியும். ஆனால், செஸ் விளையாட்டில் நீங்கள் அமைதியாகவும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இது இறுதியில் உங்கள் வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவும்' என்று கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chess Sports Cricket Yuzvendra Chahal Pragnanandha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment