இன்று விடிய விடிய விழித்துக் கொண்டிருந்த சென்னை மக்கள்....ஏன் தெரியுமா?

தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி பாக்கித் தொகை செலுத்த வேண்டியதுள்ளதாகவும், இதுகுறித்து வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்பட்டது

சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, எழும்பூர், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, போட்ஸ் கிளப், புரசைவாக்கம், பெரம்பூர், தி.நகர், வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 8 மணி முதல் திடீரென மின்தடை ஏற்பட்டது. நள்ளிரவில் நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த மின் தடைக்கு காரணம், திருவள்ளுவர் மாவட்டம் வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தான் என செய்திகள் வெளியாகின. அதாவது, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு, தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி பாக்கித் தொகை செலுத்த வேண்டியதுள்ளதாகவும், இதுகுறித்து வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த புகார் குறித்து இன்று பதிலளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “உயர் மின் அழுத்தப் பாதையில் பழுது ஏற்பட்டதால் தான் மின்தடை ஏற்பட்டது. இப்போது அந்தப் பழுது சரி செய்யப்பட்டுவிட்டது. வடசென்னையில் காலை 4 மணி முதல் மின் விநியோகம் சீராக உள்ளது. மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கும் மின்வெட்டுக்கு எந்த சம்பந்தமுமில்லை” என்று விளக்கமளித்தார்.

×Close
×Close