Advertisment

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு: 11, 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றமில்லை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) அறிவித்துள்ளார்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
10th exam postponed, tamil nadu 10th exam postponed, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு, முதல்வர் பழனிசாமி அறிவிப்பு, tamil nadu cm palaniswami announced, sslc public exam postponed, coronavirus, corona, covid-19

10th exam postponed, tamil nadu 10th exam postponed, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு, முதல்வர் பழனிசாமி அறிவிப்பு, tamil nadu cm palaniswami announced, sslc public exam postponed, coronavirus, corona, covid-19

10th Exam Postponed: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) அறிவித்துள்ளார். மேலும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலக அளவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 2.70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரச் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்று சமூகப் பரல்மூலம் வேகமாகப் பரவுகிறது ஈரான், இத்தாலி, பல நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன.

சீனாவில் தனியத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் பரவல் சீனாவுக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரிய அளவில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 275 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், அனைத்து வார சந்தைகள் என மக்கள் கூடும் இடங்கள் அணைத்தையும் மூட உத்தரவிட்டது.

இதனிடையே, கொரோனா பரவலைத் தடுக்க நாட்டு மக்கள் நாளை (மார்ச் 22)சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, நாளை அரசுப் பேருந்துகள், உள்ளூர் ரயில்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில், கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். மேலும், 11, 12-ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிக்கையில், “கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 27.03.2020 முதல் 13.04.2020 வரை நடைபெறுவதாக இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படும். இத்தேர்வுகள் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு, அதாவது 15.04.2020 அன்று தொடங்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 11-ம் வகுப்பிற்கு 23.03.2020 மற்றும் 26.03.2020 அன்று நடைபெற உள்ள பொதுத்தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அறிவித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Edappadi K Palaniswami Board Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment