புதிதாக 1,223 செவிலியர்கள் நியமனம்.... அமைச்சர் அறிவிப்பு

முதன்முறையாக நாட்டிலேயே தமிழகத்தில் தான் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்தாண்டு 20 ஆரம்ப சுகாதார மையங்கள் திறக்கப்படும் என்றும், அடுத்தவாரம் 250 அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வில் பணி நியமன ஆணை வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இந்தாண்டு மருத்துவ மேற்படிப்பிற்காக கூடுதலாக, 300 இடங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இந்தாண்டு புதிதாக அரசு செவிலியர்கள் 1,223 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று கூறிய அமைச்சர், முதன்முறையாக நாட்டிலேயே தமிழகத்தில் தான் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது என்றும் கூறினார். மேலும், இதன் மூலம் 9,190 செவிலியர்கள் உட்பட 17,914 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக கூடுதலாக 300 இடங்கள் பெறப்பட்டுள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close