தமிழக காவல் துறையில் பணியாற்றும் 13 போலீஸ் எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 கூடுதல் எஸ்.பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:
கூடுதல் எஸ்பியாக இருந்த ஜி.ஸ்டாலின், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, ஆர்கனைஸ்ட் கிரைம் யூனிட் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் எஸ்பியாக இருந்த டி.அசோக் குமார், பதவி உயர்வு பெற்று கடலோர காவல் படை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் எஸ்பியாக இருந்த ஆர். பாண்டியராஜன், பதவி உயர்வு பெற்று ஈரோடு எஸ்டிஎப், எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் எஸ்பியாக இருந்த சி.சியாமளா தேவி, பதவி உயர்வு பெற்று சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் எஸ்பி எம்.கிங்க்ஸ்லின் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர காவல் மார்டன் கண்ட்ரோல் ரூம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் எஸ்பி எஸ்.அரவிந்த் பதவி உயர்வு பெற்று எஸ்பி சிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்பி சிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாக இருந்த ஆர்.சக்திவேல், திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக இருந்த ஏ.சரவணன், மதுரை என்போர்ஸ்மெண்ட் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் எஸ்பியாக இருந்த அனில் குமார் கிரி, ரெயில்வே எஸ்பி (சென்னை) யாக மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த பி.விஜயகுமார் மத்திய அரசு பணிக்குச் செல்கிறார்.
சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக இருந்த டாக்டர் எம்.சுதாகர், அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த கே.பெரோஸ்கான் நெல்லை க்ரைம் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி போலீஸ் தேர்வு பள்ளி முதல்வராக இருந்த சத்தியப்ரியா அங்கிருந்து சென்னை மனித உரிமை ஆணைய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக இருந்த டாக்டர் அபிநவ் குமார், அரியலூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.