scorecardresearch

கேரளத்தில், சிறை வைக்கப்பட்ட 16 மீனவர்கள்… மீட்டுத் தர மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை

கைது செய்யப்பட்ட 20 மீனவர்களையும் எர்ணாகுளம் மற்றும் மட்டச்சேரி சிறைகளில் விசாரணை கைதிகளாக வைத்துளளனர்.

Tamilnadu fishermen jail in Kerala
கேரள சிறையில் உள்ள மீட்டுத் தரக் கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ குடும்பங்கள் கோரிக்கை விடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, மீன்பிடி உபகரணங்கள், ஐஸ்கட்டிகள் மற்றும் தொழிலாளர்களின் உணவிற்காக சமையலுக்கு தேவையான பொருள்களுடன் 20 மீனவர்கள் 3 படகுகளில் கேரளா கடற்பரப்பு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில், இவர்களை கடந்த ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் 20 மீனவர்களையும் கைது செய்து, படகுகள் மூன்றையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 20 மீனவர்களையும் எர்ணாகுளம் மற்றும் மட்டச்சேரி சிறைகளில் விசாரணை கைதிகளாக வைத்துளளனர்.

போதை பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் மீனவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில்.16 மீனவர்களை மீன்பிடி தொழிலுக்காக மட்டுமே வந்துள்ளனர்.
அதில் 4 பேர் போதை பொருட்கள் கடத்தலுக்கு உதவியுள்ளார்கள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், 16 மீனவர்கள் சாட்சி கைதிகளாக கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 16 மீனவர்களின் குடும்ங்கள் வருவாய் இல்லாத நிலையில் பெரும் மனவேதனையிலும், பொருளாதார சிக்கலிலும் சிக்கி தவிக்கின்றன.
இந்த நிலையில், 16 மீனவ குடும்பத்தை சேர்ந்த பெண்கள் குமரி ஆட்சியருக்கு கொடுத்துள்ள மனுவில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 16 fishermen imprisoned in kerala